December 7, 2025, 12:47 AM
25.6 C
Chennai

ஆன்லைன் வகுப்பின் போது வெடித்த போன்! மாணவருக்கு நேர்ந்த விபரீதம்!

cell - 2025

தற்போது ஸ்மார்ட்போன்கள் வெடிப்பது மற்றும் தீப்பிடிப்பது என்பது அடிக்கடி நிகழும் நிகழ்வாகி விட்டது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

இந்நிலையில் ஸ்மார்ட்போன் வெடித்ததில் மாணவர் படுகாயமடைந்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றுதான் கூறவேண்டும்.

தற்போது இந்தியா முழுவதும் கோரோனா பாதிப்பு ஓரளவு குறைந்துவரும் நிலையில், சில மாநிலங்களில் பள்ளிகள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன.

இருந்தபோதிலும் பாதிப்பு அதிகம் இருக்கும் மாநிலங்களில் தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகள் நடைமுறையில் இருந்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மத்திய பிரதேசத்தின் சாத்னா மாவட்டத்தில் பள்ளி மாணவர் ஒருவர் ஆன்லைன் வழியாக பாடத்தை கவனித்து வந்தபோது, திடீரென மாணவனின் ஸ்மார்ட்போன் வெடித்து சிதறியது.

இதில் மாணவன் கன்னம், காது உள்ளிட்ட இடங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று தகவல் வெளிவந்துள்ளது.

உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறிப்பாக மருத்துவர்கள் அந்த மாணவருக்கு தீவிர சிகிச்சை அளித்துவருகிறார்கள்.

8-ம் வகுப்பு படிக்கும் அந்த மாணவனின் பெயர் ராம்பிரகாஷ் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் லேப்டாப், ஸ்மார்ட்போன், டேப்லெட் சாதனங்களை கவனமாக பயன்படுத்த வேண்டும். குறிப்பாக சார்ஜ் செய்து கொண்டே இதபோன்ற சாதனங்களை பயன்படுத்துவது மிகவும் தவறு. அதேபோல் ஸ்மார்ட்போன் சூடாக இருந்தால் கொஞ்ச நேரம் அதை பயன்படுத்தாமல் இருப்பது மிகவும் நல்லது.

ஸ்மார்ட்போன்களில் குறிப்பிட்ட அப்ளிகேஷன்கள் மட்டும் பயன்படுத்துவது மிகவும் நல்லது, நீங்கள் ஸ்மார்ட்போனில் பல அப்ளிகேஷன்களை உபயோகம் செய்வதால் மெமரியை வெறுமனே அடைத்துக்கொண்டிருக்கும்,

மேலும் அந்த அப்ளிகேஷன்கள் பின்புறத்தில் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கும். இதனால் உங்கள் ஸ்மார்ட்போன் கணிசமாக வெப்பமடையும், பின்பு பேட்டரியும் பாதிக்கப்படும்.

உங்கள் ஸ்மார்ட்போனை வேறு சார்ஜர் கொண்டு பயன்படுத்தும்போது, கண்டிப்பாக ஸ்மார்ட்போன் சூடாகும். சில நேரங்களில் வெடிப்பதற்கு கூட வாய்புள்ளது.

மேலும் குறிப்பிட்ட நேரம் வரை தான் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்ய வேண்டும், இல்லையென்றால் பேட்டரி செயல் இழந்துவிடும் அல்லது சில சமயம் வெடிப்பதற்கு வாய்ப்புள்ளது.

ஸ்மார்ட்போன் அதிக நேரம் உபயோகம் செய்தால், கண்டிப்பாக ரீ-ஸ்டார்ட் செய்யவேண்டும், இதன் மூலம் ஸ்மார்ட்போனில் செயல்படும் அப்ளிகேஷன்கள் மூடப்பட்டுரேம்-க்ளீன் ஆவதால் ஸ்மார்ட்போனின் செயல்திறன் அதிகமாகும்.

குறிப்பாக ஸ்மார்ட்போனை அவ்வப்போது ரீ-ஸ்டார்ட் செய்யவில்லை என்றால், கண்டிப்பாக ஸ்மார்ட்போன் சூடாகும்.

இப்போது வரும் ஸ்மார்ட்போன்களில் மக்கள் அதிக நேரம் 4ஜி டேட்டாவை பயன்படுத்துகின்றனர், இதன் மூலம் விரைவில் சார்ஜ் காலியாகும் நிலை உள்ளது, அதன்பின்பு பேட்டரி சூடாகவும் வாய்ப்பு உள்ளது. எனவே தேவையில்லாத நேரத்தில் மொபைல் டேட்டாவை ஆஃப் செய்து வைப்பது மிகவும் நல்லது.

குறிப்பாக மொபைல் சாதனங்களை சார்ஜ் செய்தபடி பேசுவது மிகவும் தவறு. பின்பு மொபைல்போன் அல்லது புளூடூத் சாதனம் சூடாக இருந்தால் சிறிது நேரம் பயன்படுத்தாமல் இருப்பது மிகவும் நல்லது.

மேலும் செல்போனில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரியை பொருத்தே அதற்கான சார்ஜர் வழங்கப்படும். ஆனால் வேறுஒருவரின் சார்ஜரை மாற்றிப் போடும் போது வோல்ட் சப்ளையில் மாற்றம் அடைகிறது, இதனால் பிரச்சனை வரும். எனவே அந்தந்த செல்போனுக்குதகுந்த சார்ஜர் மட்டும் பயன்படுத்தினால் மிகவும் நல்லது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories