PM நரேந்திர மோடி படத்தின் வெளியீடு ஒத்திவைப்பு!

சற்றுமுன் சினி நியூஸ் லைஃப் ஸ்டைல்

pm modi trailer - 2026

பி.எம். நரேந்திரமோடி திரைப்படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப் பட்டிருக்கிறது.

விவேக் ஓபராய் நடித்த பி.எம்.நரேந்திர மோடி படம் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறைத் தழுவி எடுக்கப்பட்ட படம். பலரது எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ள திரைப்படமும் கூட!

இந்நிலையில் தற்போது நடைபெறும் 2019 பொதுத் தேர்தலைக் கருத்தில் கொண்டு இந்தப் படத்தை தயாரித்து வெளியிடுவதால் அதன் மூலம் மோடிக்கு அது சாதகமாக அமையும் என்பதால், இது தேர்தல் விதி மீறல் எனக் கூறி படத்துக்கு தடை விதிக்குமாறு காங்கிரஸ் புகார் தெரிவித்தது.

ஆனால், இந்தப் பட வெளியீடு தொடர்பான வழக்கில் மும்பை, தில்லி உயர் நீதிமன்றங்கள் தலையிட மறுத்தன. இதை அடுத்து, இப்படம் வெள்ளிக்கிழமை வெளியாவதாக இருந்தது. இந் நிலையில் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் சந்தீப் சிங் தெரிவித்துள்ளார்.

முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11-ம் தேதி நடக்கவுள்ள நிலையில், அந்த நாளிலேயே திரைப்படம் வெளியாகும் என்று கூறப் பட்டது. ஆனால், தேர்தல் விதி மீறல் குற்றச்சாட்டுக்களை அடுத்து, படத்தின் வெளியீடு ஒத்தி வைக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.