
சென்னை, வாணி மகாலில் டாக்டர் சுதா சேஷய்யன் ஆற்றும் திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இன்றைய நிகழ்ச்சியின் போது, டாக்டர் சுதா சேஷய்யன் எழுதிய “பேசும் பரம்பொருள்- தொகுதி 2” வானதி பதிப்பகத்தின் சார்பில் வெளியிடப் பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு, காலச்சக்கரம் நரசிம்மன் தலைமை வகித்தார். தினமலர் பட்டம் பொறுப்பாசிரியர் ஆர்.வெங்கடேஷ் நூலை வெளியிட டாக்டர் சுஜாதா மோகன், டாக்டர் பிரியா ராமசந்திரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.



