மோடியின் ஹெலிகாப்டர் சோதனை: தேர்தல் பார்வையாளர் இடைநீக்கம்!

இந்தியா சற்றுமுன்

modi in odisha - 2026

பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் பார்வையாளரை தேர்தல் ஆணையம் இடை நீக்கம் செய்துள்ளது.

பிரதமர் மோடி கடந்த 16ஆம் தேதி ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் பிரசாரம் செய்வதற்காகச் சென்றிருந்தார். அப்போது ஒடிசா மாநில தேர்தல் பார்வையாளர் முகமது மொசின் என்பவர், மோடி சென்றிருந்த ஹெலிகாப்டரில் சோதனை மேற்கொன்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சோதனை விதிகளுக்கு முரணாக நடைபெற்றுள்ளதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தேர்தல் ஆணையம் நெறிமுறைகளுக்கு மாறாக நடந்து கொள்வதாக, ஆணையத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில் கருப்புப் பூனைப்படை பாதுகாப்பில் உள்ளவர்கள் தொடர்பாக ஆணையம் பிறப்பித்த வழிகாட்டுதல்களுக்கு முரணாக செயல்பட்டுள்ளார் என்று, தேர்தல் பார்வையாளர் முகமது மொசின் மீது தேர்தல் ஆணையம் குற்றம் சாட்டியது. தொடர்ந்து, முகமது மொசின் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இதனை தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆயினும், கடமையைச் செய்த அதிகாரியை இடைநீக்கம் செய்து பாரபட்சமாக தேர்தல் ஆணையம் செயல்பட்டுள்ளது என்று காங்கிரஸ் கட்சி அதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.