ஏசுவுக்கு எதிரான இஸ்லாத்தின் போர்; நீங்கள் அமைதியாக இருந்தால்… நான் ஏசுவின் பக்கம்: இமாம் மொஹம்மத் தவ்ஹிதி

உலகம் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

imam tawhidi 1 - 2026

இமாம் மொஹம்மத் தவ்ஹிதி, இலங்கையில் நடைபெற்ற இஸ்லாமிய பயங்கரவாத குண்டுவெடிப்புகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

அவர் தனது டிவிட்டர் பதிவில்…

இஸ்லாமிய பயங்கரவாதிகள் ஈஸ்டர் ஞாயிறு அன்று இலங்கையின் கிறித்தவர்களை இலக்காகக் கொண்டனர். ஜஹ்ரான் ஹஷிம் மற்றும் அபு மொஹமத் ஆகியோர் குறைந்தபட்சம் 184 பேரைக் கொன்றனர், மேலும் 560 பேர் காயமடைந்தனர்; இந்த எண்ணிக்கை வேகமாக வளர்ந்து வருகிறது. பயங்கரவாதத்தின் இந்த நடவடிக்கை அனைத்துமே சர்வதேச அளவில் கண்டனம் செய்யப்பட வேண்டும்… என்று கூறியிருக்கிறார்.

மேலும், இது இஸ்லாத்தினால் தொடுக்கப் பட்டுள்ள ஏசுவுக்கு எதிரான போர். நீங்கள் இலங்கையில் நடத்தப் பட்டுள்ள குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்கு அமைதியாக இருந்தீர்கள் என்றால், நான் ஏசுவின் பக்கம் நிற்பேன்! – என்று கூறியிருக்கிறார்.

இன்னொரு பதிவில், ஸ்ரீலங்காவில் நடைபெற்ற தற்கொலைத் தாக்குதலின் பின்னணியில் இமாமாகவும் மத போதனை செய்பவராகவும் இருந்த மௌல்வி ஜஹ்ரான் ஹாசிம் என்பவரும் இருந்துள்ளார். அவருடைய பல உரைகளை நான் யுடிப்பில் கேட்டுள்ளேன். எனக்கு மிகவும் கவலை அளிப்பது என்னவென்றால், இத்தகைய பயங்கரவாத எண்ணம் கொண்ட உரைகளை எல்லாம் யுடியூப் ஏன் நீக்காமல் அப்படியே வைத்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் .. என்று தெரிவித்துள்ளார்.

ஜஹ்ரான் ஹாசிம், இலங்கையில் சங்க்ரி-லா ஹோட்டலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பின் பின்னணியில் இருந்தவர் என்றும், இந்த மாதத் துவக்கத்தில் இந்திய தூதரகத்தின் மீது தாக்குதல் தொடுக்க திட்டமிட்டவர் என்றும், ஆனால் அது வெற்றிகரமாக நடக்கவில்லை என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், இலங்கையில் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இறப்புகள் அதிகரித்து வருகின்றன. இலங்கை இந்நேரம் இந்தியாவிடம் கருப்புப் பூனைப் படையினரை அனுப்பச் சொல்லி கேட்கவேண்டும்… என்று கூறியிருக்கிறார் இமாம் தவ்ஹிதி.

இலங்கையின் பாதுகாப்பு அமைச்சர் இந்தத் தாக்குதலை துரதிருஷ்டவசமான பயங்கரவாதத் தாக்குதல் என்று குறிப்பிட்டிருக்கிறார். இது மிகவும் வருந்தத் தக்கது. இது துரதிருஷ்டவசமான தாக்குதல் அல்ல… உங்கள் நாட்டின் மீது நடத்தப் பட்டுள்ள அப்பட்டமான மிகப் பெரிய தாக்குதல். மக்களின் ஆயுதப் போர் முடிந்தவடைந்த 10 ஆண்டுகளில் நிகழ்த்தப் பட்டுள்ள மிகப் பெரும் தாக்குதல் என்று சாடியுள்ளார் இமாம் தவ்ஹிதி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.