லஞ்ச் பாக்ஸ் கார்னர்: காய்கறி பொங்கல்!

Published:

Vegetable Pongal - 2026

காய்கறி பொங்கல்
தேவையான பொருட்கள்
பச்சரிசி, பாசிப் பருப்பு தலா 1 கப்
பட்டாணி, பொடியாக நறுக்கிய
கேரட்,பீன்ஸ்,மூன்றும் சேர்ந்து 1 கப்
பெ.வெங்காயம்-2
தக்காளி-2
இஞ்சி 1 துண்டு
பெருங்காயம் 1 சிட்டிகை
நெய்-1 டேபிள் ஸ்பூண்
சீரகம்1/2 டே.ஸ்பூன்
உப்பு
தாளிக்க:
மிளகு,சீரகம் தலா 2 டே.ஸ்பூன்
பட்டை, லவங்கம்,ஏலம் தலா 2
முந்திரி-10
கறிவேப்பிலை சிறிதளவு
நெய், எண்ணெய் தலா 2 டே.ஸ்பூன்

செய்முறை
அரிசி,பருப்பு இரண்டையும் ஒன்றாக கலந்து மூன்றரை கப் தண்ணீர், நெய், பெருங்காயம், சீரகம் சேர்த்து வேக வையுங்கள். முக்கால் பதம் வெந்ததும், உப்பு சேர்க்கவும். பதமாக வெந்ததும் இறக்குங்கள்.‌ வெங்காயம், இஞ்சி, தக்காளி பொடியாக நறுக்குங்கள். வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய், நெய்யை காய வைத்து தாளிக்க கூறப்பட்டுள்ள பொருட்களையும் (முந்திரியும்) இஞ்சியையும் தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை, காய்களைச் சேர்த்து வேகும் வரை வதக்குங்கள். கடைசியாக தக்காளி சேர்த்து சிறிது கிளறி பொங்கலை கொட்டி நன்றாக கிளறி இறக்குங்கள். சாம்பார்,சட்னியோடு பரிமாறுங்கள்.

ALSO READ:  ஜெனகை மாரியம்மன் கோயிலில் ஆடிப்பூர வளையல் அணிவித்து வழங்கல்!

Related articles

Recent articles

spot_img