பொங்கல் ஸ்பெஷல்: பனங்கிழங்கு பாயாசம்!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
Palmyra-tuber-payasam
Palmyra-tuber-payasam

பனங்கிழங்கு பாயாசம்

தேவையான பொருட்கள் :

பனங்கிழங்கு – 4

தேங்காய்ப்பால் – ஒரு கப்

பனை வெல்லக் கரைசல் – அரை கப்

ஏலக்காய்த்தூள் – சிறிதளவு

நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை – தேவையான அளவு

நெய் – ஒரு ஸ்பூன்.

செய்முறை :

பனங்கிழங்கை முழுதாக வேக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதில் வெளியில் உள்ள தோல் பகுதியையும், உள்ளே உள்ள தண்டு பகுதியையும் நீக்கி விட வேண்டும். இதனை மிக்சியில் விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

வாணலியில் நெய்யை சேர்த்து சூடானதும் பனங்கிழங்கு விழுதை சேர்த்து அடிபிடிக்காதவாறு 3 நிமிடம் வரை அடுப்பை சிம்மில் வைத்து வதக்க வேண்டும்.
அதனுடன் பனை வெல்லக் கரைசல் சேர்த்து, கொதித்து வரும் போது இறக்கிக் கொள்ளலாம்.

தேங்காய்ப்பால், ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி மற்றும் திராட்சை சேர்த்து கலக்கி பரிமாறவும். பனங்கிழங்கு பாயாசம் ரெடி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.