அடுத்த மாதம் 1 தேதி பள்ளி கல்லூரிகள் திறப்பு: முதல்வர்!

இந்தியா கல்வி சற்றுமுன்
school 1 1

தெலுங்கானா மாநிலத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடந்து கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் முதுநிலை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தெலுங்கானா மாநிலத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.

2020 – 2021 ஆம் கல்வியாண்டில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் 10, 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நெருங்குவதால் 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

மேலும் இன்டர்மெடியட் கல்லூரிகள், டிகிரி கல்லூரிகளுக்கும் வகுப்புகள் தொடங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.