எங்க ஊர் முடிகண்டம் இப்போ வெளில தெரியுது ரொம்ப பெருமையா இருக்கு!

திருச்சி பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல் விளையாட்டு

gomathi gold medalist - 2026

எனது சிறிய ஊரான முடிகண்டம் இப்போது வெளி உலகுக்குத் தெரிவது எனக்குப் பெருமையாக இருக்கிறது என்கிறார் தங்கத் தமிழ்ப் பெண் கோமதி மாரிமுத்து!

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார் திருச்சி அருகே உள்ள முடிகண்டம் கிராமத்தைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து. 23வது ஆசிய தடகளப் போட்டிகள் தோகாவில் நடைபெற்று வருகிறது. இதில் 800 மீட்டா் ஓட்டப்பந்தயத்தில் 30 வயதான தமிழகத்தைச் சோ்ந்த, இந்திய வீராங்கனை கோமதி மாாிமுத்து 2 நிமிடம் 2.70 விநாடிகளில் 800 மீட்டா் தூரத்தை கடந்து முதல் இடத்தை பிடித்தாா்.

தாம் தங்கப் பதக்கம் வென்றது குறித்து அவர் கூறியபோது… தங்கம் வெல்ல வேண்டும் என்ற என்னுடைய வாழ்நாள் கனவு நிறைவேறியது. பதக்கம் வென்றதால் என்னுடைய சிறிய ஊர் முடிகண்டம் தற்போது வெளியே தெரிவது பெருமையாக உள்ளது.

தங்கப் பதக்கம் பெறும்போது தேசிய கீதம் இசைக்கையில் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது… என்று கூறியுள்ளார் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்து.

இதனிடையே, தங்க பதக்கத்தை வென்ற தமிழக வீராங்கணை கோமதி மாரிமுத்துவுக்கு திரையுலகில் முதல் நபராக ரூ. 1 லட்சம் பரிசுத் தொகை அறிவித்துள்ளார் நடிகர் ரோபோ சங்கர்.

தங்கப் பெண் கோமதி மாரிமுத்துவுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுதல்களை தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் முக.ஸ்டாலின் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.