மம்தா இனிப்புகள் அனுப்புவார் – மோடி! மோடிக்கு இனிப்புகள் மட்டுமே; ஓட்டுகள் அல்ல – மம்தா!

Published:

mamta banarjee modi - 2026பிரதமர் மோடியை பாலிவுட் நடிகர் அக்சய்குமார் நேற்று காலை ஏ.என்.ஐ நிறுவனத்திற்காக சிறப்பு பேட்டி ஒன்றை எடுத்தார்.

மக்களவைத் தேர்தல் நடைபெறுவதால் அரசியல் கலக்காமல், மோடி தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த கேள்விகளுக்கு பதிலளிப்பதாக கூறியிருந்தார். அதன்படி அக்சய்குமாரின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது அவர், என்னிடம் கேட்கும் பலரும் எப்படி நீங்கள் கோபப்படாமலேயே இருக்கிறீர்கள் என கேட்கின்றனர்! கோபப்படும் அளவுக்கு நான் எந்த சூழலையும் உருவாக்கி கொள்வதில்லை என்பதே அதன் காரணம்.

இப்போதும் எதிர்க்கட்சிகளில் எனக்கு நண்பர்கள் பலர் உள்ளனர். இதைச் சொல்வதால் எனக்கு அரசியல் லாபம் எதுவும் இல்லை. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆண்டு தோறும் எனக்கு குர்தா மற்றும் இனிப்புகள் அனுப்புவார்… என்று கூறினார்.

mamata modi - 2026

இந்நிலையில் இதற்கு கருத்து தெரிவித்துள்ளார் மம்தா பேனர்ஜி. ஆடைகள், பரிசுகள் தருவோம். ஆனால், ஓட்டுகளை தர மாட்டோம் என அவர் கூறியுள்ளார்.

ALSO READ:  இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

ஆண்டுக்கு 1 அல்லது 2 குர்தாக்களையும், இனிப்புக்களையும் எனக்கு அனுப்புவதை மம்தா வழக்கமாகக் கொண்டுள்ளார் என பிரதமர் மம்தா பேனர்ஜியின் பெயரைக் குறிப்பிட்டுக் கூறியிருந்த நிலையில், பிரதமர் மோடியின் பெயரை குறிப்பிடாமல் மம்தா பானர்ஜி அதற்கு பதிலளித்துள்ளார்.

பரிசுகள் கொடுத்து விருந்தினர்களை வரவேற்பதும், முக்கிய நாட்களில் வாழ்த்து சொல்வதும் பெங்காலிகளின் கலாச்சாரம். ஆனால் ஒரு ஓட்டு கூட தர மாட்டோம் என்றார்.

Related articles

Recent articles

spot_img