விரைவில் வருவோம்…! மேற்கு வங்கத்தில் ஐ.எஸ். இயக்கத்தின் மிரட்டலால் அதிர்ச்சி!

இந்தியா உலகம் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

is poster bengali 1 - 2026

இலங்கை தொடர் குண்டு வெடிப்புகளை அடுத்து வங்கத்தை குறி வைத்திருக்கிறது ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு!

மீண்டும் விரைவில் வருவோம் என்ற தலைப்புடன் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் போஸ்டர்கள் பெங்காலியில் எழுதப்பட்ட நிலையில் சமூக தளங்களில் உலா வருகிறது. பெங்காலி மொழியில் எழுதப்பட்டிருந்த போஸ்டர்களை வெளியிட்டுள்ள telegram channel அடுத்த தாக்குதல் வங்கதேசம் அல்லது மேற்குவங்கம் ஆக இருக்கக் கூடும் என்று தெரிவித்துள்ளது

வங்க மொழியில் எழுதப்பட்டுள்ள இந்த போஸ்டர் குறித்து உளவுத்துறை தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த விவகாரத்தை தீவிர விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது

வியாழக்கிழமை இரவு இந்த போஸ்டர்கள் வெளியிடப்பட்டன.  ‘விரைவில் வருவோம் இன்ஷா அல்லாஹ்’ என்று இந்த போஸ்டரில் ஐஎஸ் மாடலில் எழுதப்பட்டிருந்தது. ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் லோகோவுடன் அல்-முர்சலாட் என்ற குழுவின் பெயரில் இந்த போஸ்டர்கள் இருப்பதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

வங்கதேசத்தில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு ஏற்கெனவே ஊடுருவியுள்ளது! வங்க தேசத்தைச் சேர்ந்த உள்ளூர் பயங்கரவாத அமைப்பான ஜமாத்உல் முஜாஹிதீன், ஜேஎம்பி என்ற பெயரில் ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு கொண்ட அமைப்பாக இருந்து வருகிறது.

இந்த அமைப்பு இதற்காக பல்வேறு நபர்களை தங்கள் இயக்கத்திற்கு சேர்த்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்துள்ள மேற்குவங்கத் தலைநகர் கொல்கத்தா மற்றும் மேற்கு வங்கத்தின் பல்வேறு இடங்களில் இருந்து இந்த அமைப்புக்கு நபர்களை சேர்த்துள்ளது இந்த அமைப்பு.

மூன்று வருடங்களுக்கு முன்பு உள்ளூர் ஜேஎம்பி ஸ்லீப்பர் செல்கள், மேற்கு வங்கத்தில் இளைஞர்கள் தங்களது பயங்கரவாத இயக்கத்தில் சேர வேண்டும் என போஸ்டர் அடித்து ஒட்டி இருந்தது.

இந்நிலையில் ஐ.எஸ்ஸின் வங்க மொழியில் எழுதப்பட்டுள்ள ‘விரைவில் வருவோம்’  போஸ்டர் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டிய அம்சம் ஆகிவிட்டது குறிப்பாக இலங்கையில் நேஷனல் தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பு நிகழ்த்திய வெடிகுண்டுத் தாக்குதலை அடுத்து வங்கத்திலும் ஐஎஸ் அமைப்பு குறித்து எச்சரிக்கை கண்ணுடன் பார்க்க வேண்டியதாக கூறப்படுகிறது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.