மோடி வியாழன் கிரகத்தை கைப்பற்றி அம்பானிக்கு விற்று விட்டார்…

உரத்த சிந்தனை லைஃப் ஸ்டைல்

Rahul in a rally - 2026

மோடி வியாழன் கிரகத்தை கைப்பற்றி விட்டார்.. ராகுல்*  இது என்னடா புதுக்கதை என்று கேட்பவர்களுக்கு.. விளக்கம் கீழே..

மோடி நாற்பத்தைந்தாயிரம் கோடி ஏக்கர்களை அம்பானிக்கு தானமாக கொடுத்துள்ளார்.. இது ராகுலின் ஸ்டேட்மென்ட்.. அதாவது ( இப்போ கணக்கு போட்டு பார்ப்போம் )

இருநூற்றைம்பது ஏக்கர் சேர்ந்தால் ஒரு சதுர கிலோமீட்டர். ..  எனவே, மோடி அம்பானிக்கு கொடுத்த நிலப்பரப்பின் அளவு, நூற்று என்பது கோடி சதுர கிலோமீட்டர் …
(45000 கோடி / 250 = 180 கோடி…கணக்கு சரியா என்பதை கால்குலேட்டரை கையில் எடுத்து நீங்களே கணக்கு போட்டு பார்த்து கொள்ளுங்கள்) …..

இதன்படி பார்த்தால் இந்தியாவின் மொத்த பரப்பளவு எழுபத்தைந்து கோடி ஏக்கர். …. (ஒரு சதுர கிலோமீட்டருக்கு இரு நூற்றைம்பது ஏக்கர் வீதம் முப்பது இலட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு எத்துணை ஏக்கர் என்று நீங்களே கணக்கு போட்டு பார்த்து கொள்ளுங்கள் ) ..

எனவே மோடி அம்பானிக்கு கொடுத்த நிலப்பரப்பின் அளவு, மொத்த இந்தியாவை போல அறுநூறு மடங்கு.. வாயில் விரலை வைக்க வேண்டாம்.. பப்பு சொன்ன கணக்கு தாங்க … நான் சொல்லலே…

இந்த மொத்தஉலகத்தின் நிலப்பரப்பை போல பனிரெண்டு மடங்கு…..அடேங்கப்பா….
அதாவது பூமியை விடவும் பனிரெண்டுமடங்கு பெரிய கிரகத்தை மோடி அம்பானிக்கு தானமாக கொடுத்துள்ளார்.  அதெப்படி முடியும் ?

எனவே பப்புவின் கூற்றுப்படி, மோடி ரகசியமாக, இந்த பூமியை விடவும் பலமடங்கு பெரிதான வியாழன் கிரகத்தின் மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தி அதை கைப்பற்றி விட்டார்..

பிறகு அதனை அம்பானிக்கு கொடுத்து விட்டார். ..

ராகுல் சொன்ன நாற்பத்தைந்தாயிரம் கோடி ஏக்கர்கள் வேறு எங்கிருந்து மோடிக்கு கிடைத்திருக்க முடியும் ?  எனவே *மோடி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தி வியாழன் கிரகத்தை கைப்பற்றி விட்டார்.

இதை பப்பு தாங்க சொல்றாரு .. எனவே காங்கிரஸ்காரங்க இதை ஒப்புக்கணும்ங்க ..

1 thought on “மோடி வியாழன் கிரகத்தை கைப்பற்றி அம்பானிக்கு விற்று விட்டார்…”

  1. பப்புக்கு கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் கணக்குல்லாம் தெரியாது, இதைப்போல (சைக்கோ) என்ன பேசுறதுன்னே தெரியாம ஒளறிக்கிட்டிருக்கு. அதை புடிச்சு கூண்டுக்குள் அடையுங்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.