சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்குகளில் பாமக., இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். மேலும், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடர்ந்த அவதூறு வழக்கில் ஆஜரான அன்புமணிக்கும், அடுத்தமுறை விசாரணைகளில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களித்த நீதிபதி சாந்தி, வழக்கு விசாரணையை வரும் 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி ராமதாஸ், எதிர்க்கட்சிகள் மீது அவதூறு வழக்குகள் தொடர்வதும், எதிர்த்துப் போராடினால் கைது செய்வதும் வாடிக்கையாகி விட்டது என்று குற்றம் சாட்டினார்.




