எனக்கு ஆதரவு அளிக்கக் கோரி எந்தவொரு எம்எல்ஏவையும் நிர்பந்திக்கவில்லை-ஏக்நாத் ஷிண்டே

Published:

எனக்கு ஆதரவு அளிக்கக் கோரி எந்தவொரு எம்எல்ஏவையும் நிர்பந்திக்கவில்லை என்று மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நேற்று பேரவைத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. அப்போது மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பேசியதாவது:

Eknath Shinde PTI07 03 2022 000093B 1 - 2026

சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேவின் கொள்கைகளின் அடிப்படையில் மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா அரசு பதவியேற்றுள்ளது. இந்திய அரசியலில் இதற்கு முன்பு எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் ஆளும் கட்சியில் இணைவது வாடிக்கையாக இருந்தது. மகாராஷ்டிராவில் ஆளும் அரசில் இருந்து எதிர்க்கட்சிகளுக்கு தலைவர்கள் மாறியுள்ளனர். கடந்த ஆட்சியில் நான் அமைச்சராக பணியாற்றினேன். நான் உட்பட பல்வேறு அமைச்சர்கள் அரசை விட்டு விலகி புதிய அரசை அமைத்துள்ளோம்.

1723336 maharashtra2 - 2026

எங்கள் அணியை சேர்ந்த எம்எல்ஏக்களுடன் தொடர்பில் இருப்பதாக சிலர் (உத்தவ் தாக்கரே) கூறி வந்தனர். சுமார் 25 எம்எல்ஏக்கள் வரை தொடர்பில் இருப்பதாக ஊடகங்களுக்கு அவர்கள் பேட்டியளித்தனர். அனைத்தும் இன்று பொய்யாகி விட்டது.

எனக்கு ஆதரவு அளிக்கக் கோரி எந்தவொரு எம்எல்ஏவையும் நான் நிர்பந்திக்கவில்லை. அவர்களாகவே என்னோடு இணைந்திருக்கின்றனர். எங்களிடம் 50 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர். பாஜகவில் 115 எம்எல்ஏக்கள் உள்ளனர். எனினும் பெருந்தன்மையுடன் எனக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேவின் கொள்கைகளை உறுதியுடன் பின்பற்றுகிறேன். அன்றும் இன்றும் உண்மையான சிவசேனா தொண்டனாக செயல்படுகிறேன். முதல்வர் பதவியை நான் விரும்பவில்லை. விதியின் காரணமாக அந்த பதவியில் அமர்ந்துள்ளேன். என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த பிரதமர் நரேந்திர மோடியின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வேன் என அவர் பேசினார்.

மகாராஷ்டிர முதல்வராக பதவியேற்றுள்ள ஏக்நாத் ஷிண்டேவின் தந்தை சாம்போஜி ஷிண்டே தாணே நகரில் காகித அட்டை தயாரிக்கும் ஆலையில் தொழிலாளியாகவும் அவரது தாயார் கங்குபாய், வீட்டு பணிப்பெண்ணாகவும் வேலை செய்தனர்.

தாணேவின் கிசான் நகரில் ஏக்நாத் ஷிண்டே குடும்பம் வசித்தது. ஏழ்மை காரணமாக பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு கூலி வேலைகளுக்கு சென்றுவந்தார். ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்து வந்தார். மீன் கடையில் மீன்களை சுத்தம் செய்து கொடுக்கும் பணியையும் அவர் செய்திருக்கிறார்.

தாணே கிசான் நகர் பகுதியில் நீண்ட காலமாக நிலவிய குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணவே ஏக்நாத் ஷிண்டே அரசியலில் கால் பதித்தார். ஆரம்பத்தில் ஆர்எஸ்எஸ் தொண்டராக இருந்த அவர், பின்னர் சிவசேனாவில் இணைந்து கவுன்சிலர் ஆனார்.

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

ஒருமுறை தாணேவின் கிசான் நகரில் ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளை தண்ணீர் சூழ்ந்தது. மாநகராட்சி ஊழியர்கள் வருவ தற்கு தாமதம் ஏற்பட்ட போது ஏக்நாத் ஷிண்டே களத்தில் இறங்கி குழாய் உடைப்பை சரி செய்தார். இதை அப்பகுதி மக்கள் இன்றும் நினைவுகூர்கின்றனர்.

ரேஷன் கடைகளில் பொருட்கள் இல்லை என்று புகார் எழுந்தால் மக்களை திரட்டி நேரடியாக உணவு கிடங்குக்கே சென்று ஷிண்டே போராட்டம் நடத்தியுள்ளார். மக்கள் பணியில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டிருந்த அவரது வாழ்வில் 2000-ம் ஆண்டு ஜூன் 2-ம் தேதி மிகப்பெரிய சோகம் ஏற்பட்டது.

ஏக்நாத் ஷிண்டே, அவரது மனைவி லதா, 2 மகன்கள், ஒரு மகள் ஆதிஓக் சதாரா பகுதி நீர்நிலையில் படகில் சென்றனர். அப்போது ஷிண்டேவின் 11 வயது மகன் திபேஷ், 7 வயது மகள் சுபாதா தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். அதன்பின், பல வாரங்கள் தனி அறையில் முடங்கி கிடந்தார்.

சிவசேனா மூத்த தலைவர் ஆனந்த் திக்கேவும் ஷிண்டேவின் மனைவி லதாவும் அவரை ஆறுதல்படுத்தினர். அரசியலில் இருந்து விலக நினைத்த ஷிண் டேவை மீட்டு மீண்டும் மக்கள் பணியில் ஈடுபட செய்தனர்.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

ஏக்நாத் ஷிண்டே, லதா தம்பதியரின் ஒரே மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே மருத்துவம் படித்துள்ளார். கடந்தமக்களவைத் தேர்தலில் கல்யாண் தொகுதியில் ஸ்ரீகாந்த் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று எம்.பி.யாக பதவி வகிக்கிறார்.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img