கமல் கூறியது வரலாற்று உண்மைகள்: சொல்பவர் ‘தீவிரவாதி’ திருமாவளவன்

Reporters Diary அடடே... அப்படியா? சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்

thirumavalavan met parents of akash - 2026

கடலூர் மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சியில் நடைபெற்ற திலகவதி படுகொலை மற்றும் திருவாரூர் கொல்லிமலை சாதிய வன்கொடுமை ஆகியவற்றை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், திருமாவளவன் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், நாதுராம் கோட்சே பற்றி கமல் கூறிய கருத்துக்கள் வரலாற்று உண்மைதான் என்றும், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தான் வகிக்கும் உயர்ந்த பதவியை மறந்து பேசுவது சரியல்ல என்றும் கூறினார்.

மேலும், அதிமுக மெள்ள மெள்ள சங்பரிவார் சக்தியாக மாறி வருவதாக தோன்றுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.thirumavalavan - 2026

இதனிடையே, கோட்சே ஒரு இந்து தீவிரவாதி என்ற கருத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் பேசிய திருமாவளவனை, கமல் கூறிய லாஜிக் படியே பார்த்தால், தலித் தீவிரவாதி என்று சொல்லலாமா என சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.