ராகுலுடன் செருப்பு அணிந்து நெல்லையப்பர் கோயிலுக்கு வந்த குழு: இந்து முன்னணி கண்டனம்!

Published:

hindu munnani interview in nellai issue - 2026

நெல்லையப்பர் கோவிலினுள் ராகுல்காந்தியோடு செருப்பு அணிந்து சென்று சுவாமி நெல்லையப்பரை அவமதித்து திருக்கோயில் புனிதத்தை கெடுத்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளையும் வேடிக்கை பார்த்த திருக்கோயில் நிர்வாகத்தையும் வன்மையாக கண்டிக்கிறோம் .. என்று நெல்லை மாவட்ட இந்து முன்னணியினர் சமூகத்தளங்களில் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தனர். இது வைரலானது.

மேலும், ராகுல் வருகை காரணமாக மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை நெல்லையப்பர் கோவிலில் நடைபெறும் உழவாரப்பணிக்கு தடை விதித்துள்ளனர். காங்கிரஸ்காரன் கோவிலை சுத்தம் பண்ணவும் மாட்டான். சுத்த செய்கிற அடியார்கள் பணியை கெடுப்பதா ? அப்பர் பெருமான் உழவாரம் கொண்டு திருக்கோவிலை தூய்மைபடுத்த சீரமைக்க துவக்கிய அறப்பணியை பல நூற்றாண்டு கடந்தும் பல திருக்கோவில்களில் பக்தர்கள் உழவாரப்பணி செய்து வருகின்றனர்.. 25 ஆண்டுகளாக ஆங்கில மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் நடைபெற்று வரும் உழவாரப்பணியை தடுத்த நிறுத்திய காங்கிரஸ் கட்சிக்கு இந்துமுன்னணி கடும் கண்டனம் தெரிவிக்கிறது என்று குறிப்பிட்டிருந்தனர்.

hindu munnani interview in nellai issue1 - 2026

இந்நிலையில், இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் இன்று நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் குறிப்பிட்டதாவது…

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

கடந்த ஞாயிற்றுக்கிழமை நெல்லையப்பர் திருக்கோவிலுக்கு ராகுல்காந்தி வந்தபோது அவருடன் வந்த பாதுகாவலர்கள் ஷூ அணிந்தும் காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் சஞ்சய்தத் என்பவர் காலில் செருப்பு அணிந்து வந்துள்ளார் இது மிகுந்த கண்டனத்திற்கு உரியது .

பொதுவாக இந்து கோவில்களில் நாடு முழுவதும் செருப்பணிந்து யாரும் கோவிலுக்குள் செல்வதில்லை. இது தெரிந்தும் வேண்டுமென்றே கோவிலுக்குள் செருப்பணிந்து சென்றது வேதனைக்குரியது இந்துமுன்னணி இதனை வன்மையாக கண்டிக்கிறது.

இதற்குக் காரணமான நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி நெல்லை டவுன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளது

கவனக்குறைவாக செயல்பட்ட நெல்லையப்பர் திருக்கோவில் அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்துகிறது.

நெல்லையப்பர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் 4வது ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வரும் உழவாரப்பணி ராகுல் வருகை காரணமாக தடை செய்யப்பட்டுள்ளது இது வேதனைக்குரிய ஒன்றாகும்.

கன்னியாகுமரியில் பிரச்சாரத்திற்கு சென்ற ராகுல் பாரதப் பிரதமர் ஒரே நாடு ஒரே மதம் என பேசி வருவதாக பொய்யான தகவல்களை வெளியிட்டுள்ளார்.

ALSO READ:  செல்போனுக்குத் தடை; கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தண்டனையா?

ஒரே மதம் என பாரதப் பிரதமர் ஒருநாளும் குறிப்பிட்டதில்லை; சிறுபான்மையினர் அதிகமாக உள்ள கன்னியாகுமரி தொகுதியில் மத ரீதியாக அரசியல் செய்யும் நோக்கத்துடன் ஓட்டுகளை மதரீதியில் பிரிக்கும் நோக்கத்துடன் ராகுல் பேசியுள்ளார். அவர் மீது இந்திய தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.. என்றார்.

இந்துமுன்னணி மாநில செயலாளர் வழக்கறிஞர் கா.குற்றாலநாதன் மாவட்ட பொதுச்செயலாளர் பிரமநாயகம் மாவட்ட செயலாளர் சுடலை இந்து வியாபாரிகள் நலச்சங்க மாநகர தலைவர் காசி இந்து வியாபாரிகள் நலச்சங்க மாநகர பொருளாளர் மூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

Related articles

Recent articles

spot_img