
சமீபத்தில் திரு குலாம் நபி ஆசாத் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான பிரிவு உபசார விழா நடந்தது.
.
விழாவில் அனைவருக்கும் ஓர் ஆச்சரியம் காத்து இருந்தது. நிற்க ..
நடராசன், தாளமுத்து இவர்களை தெரியுமா தெரியுமா?
1939 ல் இவர்கள் இருவரும்.. 1965 ல் இன்னும் பத்து பேரும் .. இறந்தார்கள்.. காரணம் மொழி போர் என்ற தூண்டப்பட்ட வெறி. தங்கள் வருங்கால அரசியல் வாழ்வு வேறு எப்படியும் அமையாது .. எதையாவது ஒரு வெறியை தூண்டி தான் மக்களை நம் பக்கம் ஈர்த்து தங்கச்சுரங்கமான ஆட்சிக் கட்டிலை கைப்பற்ற வேண்டும் என்று ஒரு கூட்டம் அலைந்தது.
.
அதற்கேற்றார் போல் – ஜமீந்தாரர்களாக வளம் வந்த காங்கிரெஸ் கட்சியினர், சுதந்திரம் வாங்கி கொடுத்த கட்சி என்றைக்கு இருந்தாலும் ஆட்சி நம்முடையதுதான், இவர்கள் என்ன செய்து விட போகிறார்கள் என்ற மிதப்பில் இருந்தனர் . சுதந்திரம் வாங்கிய காங்கிரெஸ்-ற்கும் ஆட்சி கட்டிலுக்காக வயிறு வளர்க்கும் காங்கிரெஸ்-ற்கும் துளிக் கூட சம்பந்தம் இல்லை என்பது இன்றளவில் கூட பலருக்கு புரியாமல் இருக்கிறது.
தென்பகுதி பாரதம்.. பாரத நாடு என்ற தார்மீக அடிப்படை உணர்வில் இருந்து துண்டாடப் பட வேண்டும் என்று குள்ள நரி கால்டுவெல் பாதிரி-ஒப்பிலக்கணம் என்றும் திராவிடர் என்றும் ஆரியர் என்றும் கட்டு கதைகளை கிளப்பி விட்ட நாளில் இருந்து, தமிழகம் பிரிவினை வாதிகளை இன்றளவும் சந்தித்து வருகிறது என்பது நிதர்சனம்.
மொழி வாரி மாநிலங்கள் பிரிந்தாலும் அவர்கள் அனைவருக்கும் தங்கள் மொழி மீது ஒரு அபரிதமான நம்பிக்கை இருந்தது.. எத்தனை மொழி வந்தாலும் நம் மொழி அழியாது என்று. கேரளா, ஆந்திரா, கர்நாடக, மகாராஷ்டிரா, ஆகிய மாநிலங்கள் அனைத்தும் மொழிவாரி மாநிலங்கள்தான் ஆனால் அங்குள்ள சாமானியனுக்கு கூட சமஸ்கிருதம், ஹிந்தி பரவலாக தெரியும். கிட்டத்தட்ட மதராஸ் மாகாணமும் அப்படியே .
ஆனால் வெள்ளைக்காரன் விதைத்த விதை இங்கு மட்டும் விருஷமாக வளர்ந்து இருந்தது. சுதந்திர தினத்தை கருப்பு தினமாக கொண்டாடிய கயவர்கள் மிக சிறந்த அடிப்படை கட்டமைப்பை ஏற்படுத்தினார்கள் .. பல பொய்கள் கட்டவிழ்த்து விடப்பட்டது.

இதில் கேவலம் என்ன வென்றால் இந்த பொய்கள் எங்கே எடுபட போகின்றன என்ற மெத்தன போக்கினால் இவை கண்டுகொள்ளப் படாததால். திரும்ப திரும்ப சொல்லி இந்த பொய்கள் இளைஞர்கள் மத்தியில் ஆணித்தரமாக போலி பிம்பமாக உருவெடுத்து அதுவும் இன்று வரை நீடிக்கிறது.
பயணச்சீட்டு என்று சொல்லாமல் டிக்கெட் என்று சொல்வதால் தமிழ் அழிந்து விடும் என்பதை விட ஒரு பொய் இருக்க முடியுமா கூறுங்கள்.
இவர்கள் மொழி வெறிக்கு இன்னொரு உதாரணம். ஸ்ரீரங்கம் என்பது திருவரங்கம் என்று மாற்ற படாவிட்டால் தமிழ் அழிந்து விடும் எனும் இவர்கள். இன்று வரை அறம்கண்டநல்லூர் என்ற ஊர் அரகண்டநல்லூர் என்று அழைக்கப் படுவதையோ. தஞ்சாவூர் என்பது டாஞ்சூர் , டுடிகொரின் , என்று அழைக்கப்படும் ஆங்கில வடிவங்களையோ எதிர்க்க வில்லை ஏன் என்றால் இவர்களின் குரு ஆங்கிலேயர்கள் .
தமிழகம் என்று பேர் கொடுக்க வேண்டிய இடத்தில் அரசியல் பேரத்தாலும், மத்திய அரசின் மொழி அறிவு இல்லாமையாலும், நம் மாநிலம் தமிழ் நாடு என்று பேர் பெற்றது. பாரத நாட்டின் அங்கத்தில் எப்படி இன்னொரு நாடு. ஏன் ? என்று இருந்தாலும் தனி தமிழ்நாடு என்ற அந்த விஷச்செடியின் வேறாக இந்த பெயர் மாற்றம் இருக்க வேண்டும் என்பது இந்த வெளிநாட்டு சக்திகளின் நோக்கம்.
இவர்கள் தமிழக மக்களுக்கு , குறிப்பாக இளைஞர்களுக்கு கற்று கொடுத்த கெடுமதி செயல் . தீக்குளிப்பு. இவர்கள் வரலாற்றில் இன்று வரை, தலைவனின் வீட்டில் இருக்கும் ஒருவராவது தீக்குளிக்க எத்தனித்து இருக்கிறார்களா என்றால் இல்லை. பாவம் எல்லாம் அப்பாவி உணர்வு தூண்டப்பட்ட இளைஞர்கள்.
.
இப்படி பத்து ஏமாளிகள் கிடைத்தார்கள் இவர்களுக்கு ஹிந்தி எதிர்த்து தீக்குளிக்க, உயிர்துறக்க. ஆம் தமிழ் வாழ்க ஹிந்தி ஒழிக என்று முழக்கமிட்டபடியே கீழப்பழுவூர் சின்னச்சாமி, விராலிமலை சண்முகம் முழக்கமிட்டபடியே இதையடுத்து தீக்குளித்தார். , கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், ஆசிரியர் வீரப்பன், கீரனூர் முத்து, மாயவரம் சாரங்கபாணி, சத்தியமங்கலம் முத்து, பீளமேடு தண்டபாணி உள்ளிட்ட பலர் தீக்குளித்தும், விஷமருந்தியும் கட்டாய ஹிந்தித் திணிப்பைக் கைவிடக் கோரி தற்கொலை செய்து கொண்டனர்.
இவர்களுக்கு பெயர் மொழிப்போர் தியாகிகள்.. ஒவ்வொரு ஜன.25 ம் இவர்களுக்காக விழா எடுக்கப் படுகிறது. அந்த மாதத்தில் பல ஊர்களில் மொழிப்போர் கூட்டங்கள் நடத்தப்படும். இப்பொழுதெல்லாம் அந்த கூட்டங்களுக்கு முக்கிய பேச்சாளர்கள் திருச்சி சிவா, கனிமொழி, தயாநிதி மாறன் போன்றவர்கள் கலந்து கொண்டு. உணர்ச்சி வசமாக பேசுவார்கள்.

அட ஏமாளி மொழிப்போர் தியாகிகளே நீங்கள் போட்ட அஸ்திவாரத்தில் அருமையாக மாளிகை கட்டி ஏகபோக வாழ்க்கை வாழ்பவர்களை வாழ வைக்கும் மொழி எது தெரியுமா? அது ஹிந்தி .. ஹிந்தி.. ஹிந்தி .. ஹிந்தி மட்டுமே.
உங்கள் தலைவர்கள் ஹிந்தியில் நோட்டிஸ், போஸ்டர் அடிக்கிறார்கள், ஹிந்தியில் வாக்கு கேட்கிறார்கள். உங்களை எல்லாம் ஹிந்தி படிக்க வேண்டாம் என்று சொன்ன அதே காலகட்டத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் தான் இவர்கள். மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வருவோம் …
சமீபத்தில் திரு குலாம் நபி ஆசாத் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான பிரிவு உபசார விழா நடந்தது..
விழாவில் அனைவருக்கும் ஓர் ஆச்சரியம் காத்து இருந்தது..
என்ன தெரியுமா? விழாவில் மொழிப்போர் தியாகிகள் தின சிறப்பு பேச்சாளர் திருச்சி சிவா அவர்கள் மதுர கானம் பாடியது தான். எந்த மொழியில் .. தமிழிலா .. திருப்புகழ் பாடினாரா… தேவாரம்.. திருவாசகம்.. அட சினிமா பாட்டுங்க சினிமா பாட்டு அதுவும் ஹிந்தி சினிமா பாட்டு …
எனக்கு கூட ஒன்று இரண்டு ஹிந்தி சினிமா பாட்டு ஒரு நாலு வரி தெரியும்… ஆனால் ஹிந்தி புரியாது.. ஆனால் .
திருச்சி சிவா ஹிந்தியில் பாடி, பேசி அங்கே இருந்தவர்களை மகிழ்வித்தார் .. மற்றவர்கள் கூட பார்த்து பாடினார்கள் இவர் மனப்பாடமாக பாடினார். ஒரு பாடல் அருமையாக பாடியதால் .. இன்னொரு பாடலும் பாட அழைத்தனர்…
அட அட என்ன ஹிந்தி அறிவு…
மற்ற கட்சிகளில் போஸ்டர் அடித்தவன் அடிப்படை போராட்டம் செய்தவன் எல்லாம் பெரும் பதவி பெற்று உள்ளான்.
இங்கு இன்னும் தொண்டன், விஷ பாட்டில், மண்ணெண்ணெய், தீப்பெட்டி யுடன் அலைந்து கொண்டு இருக்கிறான் தலைவனின் ஒரு உத்தரவிற்காக..
கூடவே பட்டுகோட்டையார் பாட்டு அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா?
என்ன செய்தார்கள் இவர்கள்.. ஹிந்தி எதிர்ப்பு, ஹிந்தி எழுத்தின் மீது தார் பூசுவது, ரவுடியிசம் இப்படி இரண்டு மூன்று தலைமுறையே ஹிந்தி படிக்காமல் செய்து அவர்கள் வயிற்றெரிச்சலை கொட்டிகொண்டது தான் மிச்சம்..
தமிழ் நாட்டில் பத்தாவது படிக்கும் மாணவனுக்கு தமிழில் சரியாக எழுத வரவில்லை. இவர்கள் கட்சி பதாகைகளில் எல்லாம் அடைமொழிகள் எல்லாம் அவலமான தமிழில். ஆம் வரலாறே என்பது “ வரலாரே “ என்றும் விடிவெள்ளி என்பது விடிவெள்லி என்றும் இருக்கின்றன. இவர்களின் தலைவனோ பகிரங்கமாக என்று கூட உச்சரிக்க தெரியாமல் பஹிங்கரமாக என்று உச்சரிக்கிறார்..
தமிழ் கும்மிடிபூண்டி கூட தாண்டாமல் பார்த்து கொண்ட இவர்கள் எதோ தமிழின் ஏக போக உரிமையாளர்கள் போல் பேசுவார்கள். தமிழன் இலங்கையில் செத்துக்கொண்டு இருந்த போது இங்கு போலி உண்ணாவிரதம் இருந்த இவர்கள் தமிழ் தமிழ் தமிழ் என்று கரடியாய் கத்தி கொண்டு வருவார்கள் உங்களிடம் ஏன் என்றால் இது ஓட்டு பிச்சை நேரமல்லவா..
மறக்காமல் கேளுங்கள் அவர்களிடம் எழுஞாயிறு என்று தூயத்தமிழில் சின்னத்தின் பெயரை கூட வைத்து கொள்ளாத நீங்களா தமிழின் காவலர்கள்? என்று …
- ஜி.சுரிய நாராயணன்
(G.Suriya Narayanan, 4 Velu Street , Villupuram – 605602)