nurse murder attempt in karur - 2026

கரூரில் இரு சக்கர வாகனத்தில் சென்ற செவிலியரை அரிவாளால் வெட்டிய அவரது கணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கரூர் மாவட்டம் வேலாயுதம் பாளையத்தில் வசிப்பவர் சத்தியா. வயது 40. இவர் காணியாளம்பட்டியை அடுத்த உடையாபட்டியில் உள்ள துணை சுகாதார நிலையத்தில் கிராம செவிலியராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கு சதீஸ்குமார் என்பவருடன் திருமணமாகி அவரை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பணியில் இருந்த சத்தியா, காணியாளம்பட்டியில் இருந்து உடையாபட்டியில் உள்ள துணை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்போது சுக்காம்பட்டி என்கின்ற கிராமத்திற்கு அருகில் சென்று கொண்டிருந்த போது அவரை வழி மறித்த மர்ம நபர் அவரை அரிவாளால் கையில் வெட்டி விட்டு தப்பியோடி விட்டார்.

Screenshot 2021 03 03 00 42 32 44 - 2026

அப்பகுதி வழியாக வந்த வாகன ஓட்டிகள் கிராம மக்களிடம் தகவல் தெரிவிக்க அவர்கள் சத்தியாவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக கோவைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

இது தொடர்பாக தோகைமலை காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் சத்தியாவின் கணவர் சதீஸ்குமாரே அரிவாளால் வெட்டியது தெரிய வந்தது.

இருவருக்கும் திருமணமாகி 16 வயதில் மகள் இருக்கையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு கணவர், மனைவி பிரிந்து விவாகரத்து பெற்றுள்ளனர். இந்த நிலையில் சுங்ககேட் பகுதியில் வசிக்கும் சுரேஷ் என்பவருடன் சத்தியா தவறான தொடர்பு வைத்திருந்ததால் அவற்றை நிறுத்தும்படி எச்சரித்துள்ளார் சதீஸ்குமார்.

ஆனால், அவர்களின் உறவு நீடித்ததால் செவிலியரை அரிவாளால் வெட்டியதாக வாக்கு மூலம் அளித்துள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

கொலை நடந்து சில மணி நேரத்திலேயே கொலையாளி கைது செய்து சிறையில் அடைத்தது தோகைமலை போலீசார் என்பது குறிப்பிடதக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending