கஞ்சா கடத்தல்காரர்களுக்கு போலீசார் பதிவு செய்த நையாண்டி டுவீட்டால் வாழ்த்துக்கள் குவிகிறது….!

இந்தியா கிரைம் நியூஸ்

kanja kadathal - 2026

590 கிலோ கஞ்சாவை கைப்பற்றிய அசாம் மாநில போலீசார், அந்த கஞ்சாவை கடத்திய மர்ம நபர்களுக்கு டுவிட்டர் பக்கத்தில் ஒரு நையாண்டியான டுவீட்டை பதிவு செய்துள்ளனர்.

அசாம் மாநிலத்தில் போதைபொருட்களின் கடத்தல் அதிகரித்து வருவதை அடுத்து அசாம் போலீசார் கடந்த சில நாட்களாக தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் கெளஹாத்தி உள்பட ஒருசில நகரங்களில் இருந்து 590 கிலோ போதை மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவை அனைத்து மாத்திரை வடிவில் கஞ்சா, ஹெராயின் ஆகியவை இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை

இந்த நிலையில் போதை பொருட்களை கடத்தியவர்களுக்கு ஒரு மெசேஜாக அசாம் போலீசார் ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளனர். அதில் ‘590 கிலோ போதை பொருளை தொலைத்து விட்டீர்களா? யாரும் தேட வேண்டாம்… எங்களிடம் தான் உள்ளது… வந்து பெற்று கொள்ளவும் என்று நையாண்டியாக ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளனர்.

இந்த டுவீட்டுக்கு பொதுமக்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் போதைப்பொருட்களை கைப்பற்றிய அசாம் போலீசார்களுக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.