இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் செல்பவரின் ஓட்டுனர் உரிமத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது?

சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

HELMETS 1 - 2026

இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது? என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஹெல்மெட் கட்டாயம் என்கிற விதியை ஏன் கண்டிப்புடன் தமிழகத்தில் அமல்படுத்த முடியவில்லை என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

பெங்களூர், டெல்லி போன்ற பெருநகரங்களில் ஹெல்மெட் கட்டாயம் என்கிற விதி கண்டிப்புடன் பின்பற்றப்படுகிறது என்று கூறிய நீதிபதிகள், பெங்களூர், டெல்லியில் விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் ஏன் முடியவில்லை? என்று கேள்வி எழுப்பினர்.

மேலும், இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் ஹெல்மெட் அணிந்திருப்பதில்லை என்றும் கூறினர்.

இந்நிலையில், இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என்றும் கேள்வி எழுப்பினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.