மன்மோகன் சிங்குக்கு ‘நோ’ காங்கிரஸுக்கு பெப்பே..! திமுக.,வின் அக்மார்க் அரசியல்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

dmk rajyasabha electio - 2026

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 2 பேரை அறிவித்துள்ளது திமுக! இதன் மூலம், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு இல்லை என்பதை தெளிவாக்கி, திமுக., கை விரித்து விட்டது என்றே தமிழக அரசியலில் பரபரப்பாக பேசு ‘சீட்’ இல்லை என்று திமுக வைவிரித்து விட்டதாகவே அரசியல் அரங்கில் பபரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.

மக்களவைத் தேர்தல் முடிவடைந்த நிலையில் மாநிலங்களவையான ராஜ்யசபாவின் உறுப்பினர்கள் பலரின் பதவிக்காலம் வரும் 24-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. தமிழகம் சார்பாக அனைத்துக் கட்சிகளையும் சேர்த்து மொத்தம் 18 உறுப்பினர்கள் ராஜ்யசபாவில் உள்ளனர். இவர்களில் திமுகவைச் சேர்ந்த கனிமொழி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த டி.ராஜா மற்றும் அதிமுகவைச் சேர்ந்த டி. ரத்தினவேல், வி.மைத்ரேயன், கே.ஆர்.அர்ஜுனன், ஆர்.லட்சுமணன் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வரும் 24-ஆம் தேதியோடு முடிவடைகிறது. இதில் கனிமொழி மக்களவை உறுப்பினராக வெற்றிபெற்றதால் ராஜ்யசபாப் பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களுக்கு பதிலாக புதிய எம்.பிக்களை தேர்ந்தெடுக்க வரும் 18-ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்கான வேட்பாளர்களை திமுக இன்று அறிவித்தது. அதாவது தமிழக சட்டசபையின் பலத்தின் அடிப்படையில் அதிமுகவுக்கு 3 எம்பிக்களும் திமுகவுக்கு 3 எம்பிக்களும் கிடைக்கும். இதில் அதிமுக ஒரு சீட்டை பாமகவுக்கும் திமுக ஒரு சீட்டை மதிமுகவுக்கும் தருவதாகக் கூட்டணியின் போது ஒப்பந்தம் செய்யப்பட்டது.

dmk rajyasabha election - 2026அதன்படி இன்று  வேட்பாளர்களை வெளியிட்ட திமுக தொமுச பேரவையின் பொதுச்செயலாளரான சண்முகத்தையும் மூத்த வழக்கறிஞரான வில்சனையும் அறிவித்துள்ளது. இதனால் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட சீட்டில் வைகோவே நிற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு எம்.பிக்கு 34 எம்.எல்.ஏக்களின் ஆதரவு வேண்டும். எப்படியும் திமுக சார்பில் அவர் வாக்குபெற்று எம்.பியாக ஆகிவிடுவார். மொத்தமுள்ள ஆறு இடங்களில், தி.மு.க., சார்பில் 3, அதிமுக சார்பில் 3 பேர் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளன. இந்த எண்ணிக்கையை தாண்டி வேட்பார்கள் போட்டியிடும் பட்சத்தில் வரும் ஜூலை 18 ல் மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் நடைபெறும். திமுக வேட்பாளர்கள் இருவரும் வரும் ஜூலை 4ல் வேட்பு மனுத்தாக்கல் செய்கின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் மன்மோகன் சிங்கிற்கு திமுக.,  சீட் வழங்க மறுத்துவிட்டது தெரிகிறது. ஏற்கெனவே அசாமில் இருந்து எம்.பி.,யாக அவர் தேர்வான நிலையில், தற்போது அங்கு காங்கிரசிற்கு போதுமான எம்.எல்.ஏ.க்கள் இல்லை. இந்த நிலையில், கடந்த ஜூன் 20 ல், மன்மோகனுக்கு சீட் ஒதுக்குமாறு திமுகவிடம் கோரிக்கை விடப்பட்டது.  ஆனால் மாநிலங்களவையில் தற்போதைய நிலையில், காங்கிரசிற்கு 48 எம்.பி.,க்கள் உள்ளனர். ஆனால், தி.மு.க.,விற்கு வெறும் 3 பேர் மட்டுமே உள்ளனர். எனவே தான், மன்மோகனுக்கு கைவிரித்துவிட்டு 2 இடங்களிலும் போட்டியிட முடிவெடுத்துள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்கள் கூறுகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.