images 52 - 2026

நாளை சென்னை வருகிறார் பிரதமர் மோடி..

சற்றுமுன்

தமிழ்நாட்டில் முடிக்கப்பட்ட ரயில்வே திட்டங்கள் உள்ளிட்ட பணிகளை தொடங்கி வைக்க நாளை மே 26ம் தேதி பிரதமர் மோடி சென்னை வருகிறார்.

முன்னதாக, தமிழகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைக்க ஜனவரியில் பிரதமர் மோடி தமிழகம் வர இருந்தார். ஆனால் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக அப்போதைய நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.

இந்தநிலையில் நாளை 26ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் தேசிய நெடுஞ்சாலைத்துறையின் விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி நிகழ்ச்சியில், ரூ.12,413 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருவதையொட்டி 5 அடுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி நாளை வியாழக்கிழமை பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக தமிழகம் வருகை தருகிறார். இதற்காக நாளை மாலை 3.55 மணி அளவில் ஐதராபாத்தில் இருந்து இந்திய விமானபடைக்கு சொந்தமான விமானத்தில் சென்னை வருகிறார். 5.10 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் அவரை கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்கின்றனர்.

தொடர்ந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தீவுத்திடல் அருகே உள்ள கடற்படை தளத்துக்கு செல்கிறார். பிறகு பலத்த பாதுகாப்புடன் காரில் விழா நடைபெறும் நேரு விளையாட்டரங்கத்துக்கு வருகிறார்.

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!

அங்கு நடைபெறும் விழாவில் மதுரை-தேனி 75 கிலோ மீட்டர் அகல ரயில்பாதை ரூபாய் 500 கோடி மதிப்பு.

தாம்பரம்-செங்கல்பட்டு சென்னை புறநகர் ரயில் மூன்றாவது பாதை ரூபாய் 590 கோடி மதிப்பு.

850 கோடி ரூபாய் மதிப்புள்ள 115 கிலோ மீட்டர் எண்ணூர்-செங்கல்பட்டு,  மற்றும் 271 கிலோமீட்டர் திருவள்ளூர்- பெங்களூரு  குழாய் மூலம் இயற்கை எரிவாயு திட்டம் 850 கோடி ரூபாய் மதிப்பு.

பிரதம மந்திரி அனைவருக்கும் வீடு திட்டத்தில், சென்னை  கலங்கரை விளக்கம் அருகில் கட்டப்பட்டுள்ள 116 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 1152 வீடுகள் உட்பட பல்வேறு பூர்த்தி யான திட்டங்களை திறந்து வைத்து நாட்டு மக்களுக்கு அர்பணிக்கிறார்.

சென்னை – பெங்களூரு  262 கிலோ மீட்டர் அதிவிரைவு சாலை ரூபாய் 14870 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். இதன் மூலம் சென்னை பெங்களூரு பயண நேரம் 2-3 மணி நேரம் குறையும்.

சென்னை துறைமுகம் – மதுரவாயல் நான்கு வழி பறக்கும் சாலை திட்டம் ரூபாய் 5850 கோடியில் திட்டமிடப்பட்டுள்ளது. 21 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த நான்கு வழி சாலை நேரடியாக சென்னையின் எல்லையை துறைமுகத்தோடு இணைப்பதோடு, இரண்டு மணி நேர பயணத்தை 15 நிமிடங்களாக குறைக்கும்.

ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

தர்மபுரி-நெரலூரு  தேசிய நெடுஞ்சாலையில் 3870 கோடி ரூபாய் செல்வதில் 94 கிலோமீட்டர் நான்கு வழிப்பாதை மற்றும் மீன்சுருட்டி – சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் 31 கிலோமீட்டர் 720 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படுகிறது. இந்த திட்டம் அருகாமை கிராமங்களை தேசிய நெடுஞ்சாலைகளோடு இணைக்கும்.

சென்னை எழும்பூர், ராமேஸ்வரம், மதுரை, காட்பாடி மற்றும் கன்னியாகுமரி ரயில் நிலையங்களை 1800 கோடி மதிப்பில் நவீனமயமாக்கும்  ஆகிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் நரேந்திர மோடி.

மேலும் பிரதமரின் ‘விரைவு சக்தி’ தேசிய பெருந்திட்டத்தின்  கீழ் திருவள்ளூர் மாவட்டம் மப்பேட்டில் 159 ஏக்கர் நிலத்தில் அமையவிருக்கும் பன்முனை சரக்கு பூங்காவிற்கு அடிக்கல் நாட்டுகிறார்.

பிரதமர் வருகையின் போது, அவரை சந்தித்து தமிழ்நாட்டின் கோரிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

images 52 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.