செங்கோட்டை பெண்ணுக்கு ரயிலில் நடந்த அவலம் !

உள்ளூர் செய்திகள் தமிழகம் நெல்லை

 

railway station 1 - 2026கூலித் தொழில் செய்த பெண், ஓடும் ரயிலில் கால்களை இழந்த சம்பவம் ஒன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவைச் சேர்ந்த ரங்கசாமி என்பவரின் 20 வயது மகள் காவ்யா. இவர்கள் தொழில் நிமித்தமாக தற்போது செங்கோட்டைக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

ரயிலில் சாவிக்கொத்து போன்ற பொருட்களை விற்பனை செய்வது இவர்களின் வழக்கம். இதன்படி, மும்பையில் இருந்து நெல்லை நோக்கி செல்லும் தாதர் எக்ஸ்பிரஸ் ரயிலில், மதுரையில் ஏறி, சாவிக்கொத்து விற்கும் பணியில்  காவ்யா ஈடுபட்டிருந்தார். viruthunagar station - 2026சம்பவ தினத்தன்று  ரயில், விருதுநகரை நெருங்கியதும், நடைமேடையில் நிற்கும் முன்பாகவே, அவசரப்பட்ட காவ்யா ஓடும் ரயிலில் இருந்து  கீழே இறங்க முயன்றுள்ளார்.

நடைமேடைக்கும், ரயில் படிக்கட்டிற்கும் இடையே அவரது கால்கள் சிக்கிக் கொண்டன. நீண்ட போராட்டத்திற்குப் பின் அங்கிருந்த நபர்கள் காவ்யாவை மீட்டு, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவரது 2 கால்களும் சிதைந்துவிட்டதாகவும், இனி கால்களை காப்பாற்ற முடியாது எனவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.