தேனி மாவட்டத்தில் உள்ள வருசநாடு மலைப்பகுதியில் ஆண் காட்டுமாடு ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது.இந்நிகழ்வு வன விலங்கு ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இறந்த காட்டு மாட்டுக்கு மூன்று வயது இருக்கலாம். வேறு வன விலங்குகளால் இது தாக்கப்பட்டதா அல்லது எவராலும் வேட்டையாடப்பட்டதா என விசாரித்து வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் அங்குள்ளவர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.



