ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கடலாடி ஊரில் அரசு பள்ளியில் உள்ள மாணாக்கர்களுக்கு, செய்முறை முறையில் ஒழுக்கம் மற்றும் நேர்மை ஆகியவற்றை கற்றுத்தருகின்றனர்.
இதற்காக அவர்கள் ஒரு அங்காடி வைத்துயுள்ளனர். அதில் மாணவர்கள் தாங்களே என்ன என்ன உணவுப் பொருட்கள் வேண்டுமோ அதனை எடுத்துக் கொண்டு அதற்கான பணத்தை அங்கே போட்டு விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் அவர்கள் நேர்மை மற்றும் ஒழுக்கத்தினை கடைப்பிடிக்கும் வழக்கம் வளர்கின்றது என இப்பள்ளி ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
அந்த அங்காடியில் உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் வகையில் பொருட்கள் எதுவும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.



