தேசவிரோதி என உறுதி செய்யப்பட்டவர் எம்.பி.,யா? சட்டத்தில் ஓட்டை!

உரத்த சிந்தனை சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்

h raja - 2026

தமிழகத்தில் காலியாக உள்ள ஆறு மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட மனு தாக்கல் செய்திருக்கிறார் மதிமுக., வின் வைகோ! மதிமுக.,வுக்கு என்று இல்லாமல், வைகோ.,வுக்காகவே அந்த ஒரு இடத்தை திமுக., ஒதுக்கியதாம்!

கடந்த 2009ஆம் ஆண்டு திமுக., ஆட்சியில், விடுதலைப் புலிகள் இயக்கம் வீழ்த்தப் பட்ட போது, திமுக ஆடிய நாடகங்கள், சதிகளை வெளிக்காட்ட முனைந்த வைகோ, ஒரு கூட்டத்தில், தேசத்துக்கு எதிராகப் பேசினார்.

இதை அடுத்து அவர் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப் பட்டது. அந்த வழக்கில் அண்மையில் அளிக்கப் பட்ட தீர்ப்பில், வைகோ குற்றவாளி என்றும், ஒரு வருட சிறை தண்டனையும் அளிக்கப் பட்டது. ஆனால், மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக ஒரு மாதம் தண்டனை ஒத்தி வைக்கப் பட்டது.

இந்நிலையில், வைகோ தாக்கல் செய்த மனு ஏற்கப் பட்டது. தேச துரோக வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை பெற்ற வைகோ, தேர்தலில் போட்டியிட முடியுமா என்ற நிலை ஏற்பட்ட போதும், அவரது மனு ஏற்கப் பட்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது குறித்து டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள பாஜக., தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, சட்டத்தில் ஓட்டை என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.