money - 2026

கிருஷ்ணகிரியில் புதிய மின் இணைப்பு வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்ற மின்வாரிய செயற்பொறியாளர் கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி அடுத்த பெத்ததாளாப் பள்ளியைச் சேர்ந்தவர் சந்திரகுமார், 45; தன் கட்டடத்திற்கு மின் இணைப்பு கேட்டு, கிருஷ்ணகிரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில், ஆன்லைனில் விண்ணப்பித்தார். செயற்பொறியாளர் சுதாகரன், 45 என்பவர், 3,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

electric meter
electric meter

அப்போது, மின்வாரியத்தில் செயற்பொறியாளராக பணிபுரியும் சுதாகரன், 45 என்பவர், 3,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

இதனை விரும்பாத சந்திரகுமார், மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரிடம் புகார் தெரிவித்தார். தொடர்ந்து, ரசாயனம் தடவிய ரூ.3 ஆயிரம் பணத்தை சந்திரகுமாரிடம் வழங்கிய லஞ்ச ஒழிப்புத்துறையினர், அதனை செயற் பொறியாளரிடம் வழங்கும்படி அறிவுறுத்தினர்.

கூறியபடி நேற்று மின்வாரிய அலுவலகம் சென்ற சந்திரகுமார், அங்கு ரசாயனம் தடவிய பணத்தை ஜெயசுதாகரிடம் வழங்கினார். அப்போது, அலுவலகத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், ஜெயசுதாகரை கையும், களவுமாக கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ALSO READ:  பழனி கோயில் நில விவகாரத்தில் கைதானவர் மரணம்; சந்தேகம் எழுவதாக இந்து முன்னணி குற்றச்சாட்டு!

லஞ்ச புகாரில் மின்வாரிய செயற்பொறியாளர் கைதுசெய்யப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending