காஞ்சி அத்திவரதரை தரிசிக்கும் நேரத்தை கூடுதலாக்க விஜயகாந்த் கோரிக்கை!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

vijayakanth athivarathar - 2026

காஞ்சிபுரம் அத்திவரதரை பொதுமக்கள் தரிசிக்கும் நேரத்தை தமிழக அரசு அதிகரிக்க வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து தேமுதிக., தலைவர் விஜயகாந்த் விடுத்த அறிக்கையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்தி வரதரை பூஜை செய்து 48 நாட்கள் மக்கள் தரிசிப்பதற்காக பார்வைக்கு வைப்பது மக்களுக்கு மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது

மேலும் அத்தி வரதரை தரிசிக்க பல்வேறு ஊர்களில் இருந்து வரும் பொதுமக்களுக்கு தரிசிக்கும் நேரத்தை அதிகரித்து காணவரும் பக்தர்களுக்கு அனைத்து அத்தியாவசிய உதவிகளும் பாதுகாப்பும் தமிழக அரசு செய்திட வேண்டும்

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் நிகழ்வு என்பதால் லட்சக்கணக்கான மக்கள் காஞ்சிபுரம் நோக்கி வருகிறார்கள் எனவே தரிசிக்க வரும் பொதுமக்களுக்கு எல்லா விதத்திலும் தமிழக அரசு உதவி செய்திட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் – என்று இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Kanchipuram Athivarathar sevai21 - 2026இதனிடையே, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதரை, இரவு 11 மணி வரை தரிசிக்கலாம் என்று அறிவிக்கப் பட்ட நிலையில் தற்போது இரவு 9 மணி வரை மட்டுமே தரிசிக்க அனுமதி அளிக்கப் படுவதாக ஆலய நிர்வாகம் கூறியுள்ளது.

கோயில் தூய்மைப் பணி, அத்திவரதரை அலங்கரித்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக நேரம் குறைக்கப் படுவதாக அறநிலையத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.