உலக சாதனை படைத்த நியூஸி., கேப்டன் வில்லியம்ஸன்!

உலகம் சற்றுமுன் லைஃப் ஸ்டைல் விளையாட்டு

williamson - 2026

உலகக் கோப்பை தொடர் ஒன்றில் அதிக ரன்கள் எடுத்த கேப்டன் என்ற சாதனை படைத்தார் வில்லியம்சன். 9 இன்னிங்ஸ்களில் 549 ரன்களை கடந்து இலங்கையின் ஜெயவர்தனே சாதனையை முறியடித்தார் வில்லியம்சன்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக  ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை
நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன்  படைத்துள்ளார்.

2019 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி  போட்டியில் நியூசிலாந்து – இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.  நியூசிலாந்தின் வெற்றியில் கேப்டன் கேன் வில்லியம்சன் எடுத்த ரன்கள் தான் பெரும்பாலானவை.

நடப்பு உலகக் கோப்பை தொடரில் அவர் இதுவரை 9 போட்டிகளில் பங்கேற்று 548 ரன்கள் குவித்திருந்தார். இதன் மூலம் ஒரே உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுத்த கேப்டன் என்ற சாதனையை இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ஜெயவர்தேனேவுடன் பகிர்ந்து கொண்டிருந்தார்.

தற்போது இங்கிலாந்துக்கு எதிரான இறுதி போட்டியில் கேன் வில்லியம்சன் இந்த சாதனையை முறியடித்துள்ளார். அவர் நடப்பு உலகக் கோப்பை தொடரில் 577 ரன்கள் குவித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த கேப்டன்கள் பட்டியலிலும் வில்லியம்சன் முதலிடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து பின்ஞ் (507) ஆஸ்திரேலியா, விராட் கோலி (443) இந்தியா, டுபிளெசி (387) தென் ஆப்பிரிக்கா ஆகியோர் உள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.