நிலவு குறித்த முன்னோடி ஆய்வு: பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சந்திரயான்-2

chandrayaan2 - 2026ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி நிலையத்தின் ஏவுதளத்தில் இருந்து சந்திரயான்-2 விண்கலம் நாளை அதிகாலை 2.51க்கு விண்ணில் செலுத்தப்படுகிறது.

நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக ஜிஎஸ்எல்வி. மார்க்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-2 விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான 20 மணி நேர கவுண்ட் டவுன் இன்று காலை தொடங்கியது. விண்ணில் ஏவிய 16 நிமிடங்களில் புவி சுற்று வட்டப் பாதையில் சந்திரயான்-2 செலுத்தப்படும்.

அதன் பிறகு, நிலவின் சுற்று வட்டப்பாதைக்கு விண்கலம் மாறும். அந்தப் பாதையில் 45 நாட்கள் பயணித்து செப்டம்பர் 6-ஆம் தேதி அது நிலவைச் சென்றடையும்.

சந்திரயான்-2 விண்ணில் ஏவப்படுவதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேரில் பார்வையிடுகிறார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ஆந்திர ஆளுநர் நரசிம்மன், ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்டோரும் நேரில் பார்வையிடுகிறார்கள்.

சந்திரயான் 2 ஏவும் நிகழ்ச்சியை ஸ்ரீஹரிகோட்டாவில் பொதுமக்கள் பார்வையிடுவதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

ALSO READ:  தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

chandrayaan2a - 2026

சந்திரயான் – 1 திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை இது குறித்து ஊடகங்களில் பேசிய போது, நிலவு குறித்த ஆய்வில் சந்திரயான் உலகத்திற்கே முன்னோடியாக உள்ளது; மனிதன் செல்ல நீண்ட நாட்களாகும் என்பதால் தொழில்நுட்பம் மூலம் நிலவை ஆய்வு செய்ய முடியும்!

பூமியைவிட மாறுபட்ட ஈர்ப்புவிசை உள்ள நிலவில் ஆய்வு செய்வது சவாலான பணியாகும்; சந்திரயான் – 2 ரோவர் வாகனத்தை இறக்கி சோதனை செய்ய சேலம் பகுதியிலிருந்து மாதிரி மண் பெறப்பட்டது!

ஒரு மாதத்தில் 14 நாட்கள் மட்டுமே நிலவில் விண்கலன்கள் தரையிறங்க முடியும்! முழு நிலவையும் ஆய்வு செய்ய துருவ வட்டப்பாதையில் தான் செல்ல முடியும்; துருவ வட்டப்பாதையில் நிலவை சென்றடைவது என்பது மிகவும் சவாலான பணியாகும் என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories