கியர் கம்பி இல்ல… கம்பு..! கயிறு கட்டி அரசு பஸ்ஸை ஓட்டிய ‘எமகாதக’ டிரைவர்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் புகார் பெட்டி மதுரை லைஃப் ஸ்டைல்

bus driver with stick - 2026

கியர் கம்பிக்கு பதிலாக மரக் குச்சியை செருகி, கயிறு கட்டி, அரசு பஸ்ஸை ஓட்டிய டிரைவர் இப்போது பிரபலமாகி விட்டார்.

மதுரை மேலூர் பகுதியில் இயக்கப்படும் பல அரசு பஸ்கள் ஓட்டை, உடைசல்களாகவே உள்ளன. மேலூரில் இருந்து சேக்கிபட்டிக்கு செல்லும் டவுன் பஸ்சின் நிலை மோசமாக உள்ளது. அதன் மேற் கூரை பலத்த சேதம் அடைந்துள்ளது. கியர் போடுவதற்கான இரும்புக் கம்பி உடைந்து போய் விட்டது. இதனால் மரக் குச்சியை செருகி, கயிற்றால் கட்டி வைத்து அந்த பஸ் ஆபத்தான முறையில் இயக்கப்படுகிறது.

பஸ் செல்லும் போது மரக்குச்சி கழன்று விழாமல் இருக்க பயணி ஒருவர் அந்தக் குச்சியை பிடித்துக் கொண்டு செல்வதும் நடக்கிறதாம்.இப்படி அவல நிலையில் உள்ள அரசு பஸ்களால் அதில் பயணிக்கும் மக்களுக்கும் அச்சத்துடன் உள்ளனர்.

எனவே இதுபோன்ற பஸ்களை மாற்றி விட்டு புதிய பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.