
தென்காசி அலங்கார்நகரை சேர்ந்த மாணவி ஐஏஎஸ் தேர்வில் தமிழக அளவில் பெண்கள் பிரிவில் முதலிடம் பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சண்முகவள்ளி மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) தேர்வில் இந்திய அளவில் 108வது இடத்தை பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
தென்காசி மதுரை செல்லும் சாலையில் உள்ள அலங்கார் நகரைச்சேர்ந்த ஈஸ்வர ராஜ்-கோமதி இவர்களின் மகள் சண்முகவள்ளி பொறியியல் பட்டதாரியான இவர் 2020 ல் நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 108 வது இடத்தையும், தமிழக அளவில் 3வது இடத்தையும், பெண்கள் பிரிவில் தமிழகத்தில் முதல் இடத்தையும் பிடித்துள்ளார்.
இவர் தொடக்கப்பள்ளி படிப்பை தென்காசி எம்.கே.வி.கே பள்ளியிலும், குற்றாலம் ஸ்ரீபராசக்தி வித்யாலயாவில் 10ம் வகுப்பையும், உயர்நிலைப் படிப்பை இலஞ்சி பாரத் மாண்டிசோரியில் முடித்தார். பின்னர் சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் பிஇ படித்த சண்முகவள்ளி கல்லூரியில் தங்கப்பதக்கம் பெற்று சாதனை வெற்றி புரிந்தவர்.
இதனை தொடர்ந்து அவர் தமிழக அரசு நடத்தும் சிவில் சர்வீஸ் பயிற்சி அகாடமி மற்றும் மனிதநேயம் ஐஏஎஸ் அகாடமியில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கான பயிற்சியை முடித்தார்.
தனது 3 வது முயற்சியில் இந்திய அரசு நடத்திய சிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 108வது இடத்தை பிடித்து சாதனை புரிந்துள்ளார்.
இவர்க்கு பெற்றோர்கள் இனிப்பு வழங்கி பாராட்டினர் இதனை தொடர்ந்து அப்பகுதி மக்களும் மாவட்டத்திற்க்கு பெருமை சேர்த்த மாணவியை பாராட்டி சென்றனர்.