
அந்தமானுக்கு செல்லும் விமானத்தில் எந்திரக் கோளாறு ஏற்பட்டதால் உடனடியாக சென்னை வரவழைக்கப்பட்டது.
சென்னை மீனம்பாக்கத்தில் பன்னாட்டு விமானநிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து 100-க்கும் மேற்பட்டோருடன் அந்தமானிற்கு விமானம் புறப்பட்டது.
அப்போது பறந்து கொண்டிருக்கும் போது விமான எந்திரத்தில் பிரச்சனை ஏற்பட்டது. இதனை அறிந்த விமானி உடனடியாக இதுபற்றி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்ததால் அதிகாரி உடனடியாக சென்னை திரும்புமாறு உத்தரவை பிறப்பித்தார்.
அவரின் உத்தரவின்படி தரையிறங்க தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதை தொடர்ந்து பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கப்பட்டதால் 100-க்கும் மேற்பட்டோர் எந்தவித உயிர் சேதமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இதனையடுத்து பயணிகள் மாற்று விமானம் மூலம் அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.