சென்னை தாம்பரம் அடுத்த சதானந்தபுரம் பகுதியில் பெரிய ஏரி ஒன்று அமைந்துள்ளது.
அந்த பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவர் வீட்டின் வாசலில் அப்பகுதியில் சேர்ந்த குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது 2,அடி அளவு கொண்ட முதலை குட்டி ஒன்று வருவதைக் பார்த்ததும் அங்கிருந்த குழந்தைகள் அலறி அடித்து ஓடினர்.உடனே அப்பகுதி மக்கள் அந்த குட்டி முதலையை பிடித்து பாதுகாப்பாக வைத்துள்ளனர்.
இதுகுறித்து வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
சதானந்தபுரத்தில் உள்ள பெரிய ஏரியில் முதலை குட்டிகள் இருப்பதாகவும் உடனே அதிகாரிகள் முதலைகளை பிடித்து செல்ல வேண்டும் என பொது மக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
வீட்டின் வாசலில் திடீரென முதலை வந்ததால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்