December 6, 2025, 2:38 AM
26 C
Chennai

நவம்பர் 11 முதல் தமிழகத்தின் டெல்டா மாவட்டத்தின் வழியாக ராமாயண காவிய யாத்திரை சிறப்பு ரயில்!

train
train

இந்திய ரயில்வே நிர்வாகத்தின் கீழுள்ள இந்திய ரயில்வே சுற்றுலா மற்றும் உணவு கழகத்தின் சார்பில் வடஇந்திய மாநிலத்திற்கு செல்லும் அனைத்து ரயில்களும், தமிழகத்தின் தென் மாவட்டங்களிலிருந்து புறப்பட்டு செல்கிறது.

இதனால் டெல்டா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பயன்பெற முடியாமல் போய் விடுகிறது.

மேலும், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், கடலுார், சிதம்பரம் ஆகிய ஊர்களிலுள்ள பழங்கால கோயில்கள், புராதன சின்னங்கள், சோழர்காலத்து நினைவு சின்னங்கள், அரண்மனைகள், நவக்கிரஹ கோயில்கள், கலை நயத்துடன் கூடிய சிறப்பக்கூடங்கள், இசைகருவிகள், ஐம்பொன்சிலைகள், தென்னகத்தின் கும்பமேளா என்றழைக்கப்படும், மகாமககுளம், உலக புகழ்பெற்றவர்கள் என ஏாளமான இடங்கள் உள்ளன.

Kovil north
Kovil north

இத்தகைய சிறப்பு பெற்ற இடங்களை வட இந்திய மாநிலத்தவர்கள், பார்வையிட போதுமான ரயில் வசதிகள் இல்லாமல் உள்ளன.

தற்போது விழுப்புரம், கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக வாரணாசி, அயோத்தி ரயில் சென்றாலும், அந்த ரயில் குறிப்பிட்ட நிறுத்தத்தில் மட்டும் நிறுத்தி விட்டு சென்று விடுகிறார்கள்.

இதனால் வடஇந்திய மாநிலத்தை சேர்ந்தவர்கள், டெல்டா மாவட்டங்களுக்கு வருவதை குறைத்து வருகின்றனர். இதே போல், டெல்டா மாவட்ட மக்கள், வட இந்திய மாநிலத்திற்கு சுற்றுலா செல்ல வேண்டுமானால், போதுமான ரயில் வசதிகள் இல்லாததால், சுற்றுலா செல்வதற்கு தனியார் சுற்றுலா நிறுவனத்தின் மூலம் செல்கின்றனர்.

kasi
kasi

ஆனால் அவர்கள், குறிப்பிட்ட இடத்திற்கு மட்டும் சென்று விட்டு, அழைத்து வந்து விடுகிறார்கள். இதனால் சுற்றுலா செல்பவர்கள், தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதனை கருத்தில் கொண்டு இந்திய ரயில்வே துறைக்கு கும்பகோணம் ரயில் பயணிகள் உபயோகிப்பாளர் சங்கம் சார்பில் செயலாளர் கிரி, தமிழகத்தின் தென்மாவடங்களிலிருந்து புறப்படும் ரயில் போல், தமிழகத்தின் வடமாவட்டமான தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலுார் வழியாக செல்லும் வகையில் சிறப்ப சுற்றுலா ரயிலை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், இந்தியன் ரயில்வேயின் சுற்றுலா பிரிவான ஐஆர்சிடிசி, எனப்படும், இந்திய ரயில்வே சுற்றுலா மற்றும் உணவு கழகத்தின் சார்பில், சிறப்பு ரயில் பயணத் திட்டங்களை வகுத்து இந்தியா முழுவதும் சுற்றுலாக்களை ஏற்பாடு செய்துள்ளது.

ayothi 1 - 2025

அதன்படி, மதுரையிலிருந்து வரும் 16.11.2021 அன்று இராமாயண யாத்திரை சிறப்பு ரயில் புறப்பட்டு திண்டுக்கல், திருச்சி, கும்பகோணம், கடலூர், விழுப்புரம், சென்னை எழும்பூர் வழியாக செல்கிறது.

ஹம்பி, நாசிக், சித்திரக்கூடம், காசி, கயா, சீதாமார்ஹி, நேபாள் ஜனக்புரியில் சீதா ஜென்ம பூமி, அயோத்தியில் இராம ஜென்ம பூமி, நந்திகிராம், சிருங்க வெற்பூர், பிரயாக்ராஜ் போன்ற சரித்திர புகழ் பெற்ற இடங்களில் உள்ள இராமாயண காவியத்துடன் தொடர்புடைய இடங்களை மன நிறைவுடன் தரிசிக்கலாம்.

ரயில், பேருந்து, உணவு, தங்குதல் சேர்த்து 14 நாட்களுக்கு கட்டணம் 14,490 மட்டும் வசூலிக்கப்படுகிறது. மத்திய மற்றும் மாநில அரசின் கொரோனா சுகாதார வழிகாட்டு நெறிமுறைகளோடு இந்த சிறப்பு சுற்றுலா புறப்பட உள்ளது.

பயணிகள் கண்டிப்பாக இரண்டு தவணைகள் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் சிறப்பு சலுகையில் சுற்றுலாவில் செல்ல வசதியை இந்த ரயிலில் பயன்படுத்தி கொள்ளலாம்.

temples
temples

மேலும் டிக்கெட் முன்பதிவிற்கு இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் மற்றும் ஏஜெண்டுகள் இந்த யாத்திரைக்கு முன்பதிவு செய்யலாம். இது குறித்து ரயில்வே அதிகாரி கூறுகையில்,

ராமாயண காவிய யாத்திரை சிறப்பு ரயில் கடந்த 15 வருடமாக இயங்கி வருகின்றது. கடந்தாண்டு கொரோனா தொற்றால் இந்த ரயில் இயக்கவில்லை. வரும் நவம்பர் மாதம் 16 ஆம் தேதி மதுரையிலிருந்து புறப்படும் ராமாயண காவிய யாத்திரை சிறப்பு ரயில், திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், விழுப்புரம், சென்னை ஆகிய ஊர்களில் உள்ளவர்களை ஏற்றி கொண்டு, வடமாநிலத்திலுள்ள ஹம்பி, நாசிக், சித்திரக்கூடம், காசி, கயா, சீதாமார்ஹி, நேபாள் ஜனக்புரியில் சீதா ஜென்ம பூமி, அயோத்தியில் இராம ஜென்ம பூமி, நந்திகிராம், சிருங்க வெற்பூர், பிரயாக்ராஜ் போன்ற சரித்திர புகழ் பெற்ற இடங்களில் உள்ள இராமாயண காவியத்துடன் தொடர்புடைய இடங்களை மன நிறைவுடன் தரிசிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், வடமாநிலத்திற்கு செல்லும் போது, அங்குள்ள புகழ்பெற்ற இடங்களை சுற்றிப்பார்த்து விட்டு, மீண்டும் அடுத்த இடத்திற்கு ரயில் செல்கின்றது.

ராமாயண காவிய யாத்திரை சிறப்பு ரயிலில் 18 பெட்டிகள் உள்ளன. இதில் 5 பெட்டிகளில் அதிகாரிகள், அலுவலர்கள், லக்கேஜ்கள், கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் தனிமைப்படுத்த பெட்டிகள் என 5 பெட்டிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மீதுள்ள 13 பெட்டிகளில் 936 பயணம் செய்யும் வசதி உள்ளது. ஆனால் 700 பேர் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

temple north india
temple north india

இந்த ரயிலில் பயணம் செய்வதற்கு ரயில் புறப்படும் இரண்டு நாட்கள் முன்பு வரை பதிவு செய்து கொள்ளலாம், தமிழகத்தின் டெல்டா மாவட்டத்தின் வழியாக ராமாயண காவிய யாத்திரை சிறப்பு ரயில் முதன் முதலாக செல்கின்றது.

ராமாயண காவிய யாத்திரை சிறப்பு ரயிலலில் சுற்றலா செல்ல விரும்புவர்கள், சென்னை-9003140680, மதுரை-8287931977, திருச்சி-8287931974 ஆகிய எண்ணுக்கும், www.irctctourism.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்றார்.

இது குறித்து ரயில் பயணிகள் உபயோகிப்பாளர் சங்க செயலாளர் கிரி கூறுகையில்,
ராமாயண காவிய யாத்திரை சிறப்பு ரயிலில் தமிழகத்தின் ஏறுபவர்கள், வடஇந்திய மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு இடங்களை சுற்றிபார்த்து விட்டு, மற்ற ஊர்களுக்கு அழைத்து செல்கின்றனர். இதே போல் வட இந்திய மாநிலத்தவர்களை, அழைத்து கொண்டு , டெல்டா மாவட்டத்திலுள்ள கோயில்கள், புராதன சின்னங்களுக்கு சுற்றுலாவாசிகளை அழைத்து வரவேண்டும் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories