கடிகாரமெல்லாம் தங்கம் ! பிடிச்சிடிச்சு சுங்கம் !

கிரைம் நியூஸ் சற்றுமுன்

gold theft e1563423396796 - 2026மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த மலிண்டோ விமான பயணிகளை வான் நுண்ணறிவுப்பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அஜ்மல்கான் என்பவரிடமிருந்து  ஏராளமான கைக்கடிகாரங்கள் கைப்பற்றப்பட்டன. அதனை ஆய்வு செய்த போது, தங்கத்தை தகடுகளாக மாற்றி கைக்கடிகாரத்தின் உள்ளே வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, சுமார் ரூ.23.80 லட்சம் மதிப்புடைய 690 கிராம் தங்கத்தை பறிமுதல்  அதிகாரிகள்  செய்தனர். மேலும் இது தொடர்பாக அஜ்மல்கானிடம் விசாரணை நடத்தி  வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.