தமிழகத்தில் அடுத்த வருடம் தேர்தல் என்பதால், அரசியல் ரீதியான போராட்டங்கள் வலுத்து வருகின்றன. கருத்தியல் சார்ந்த போராட்டங்களைக் காட்டிலும் மக்களைக் கவரும் நோக்கில் பொய்களை நம்பவைக்கும் வகையில் நடக்கும் ஆர்ப்பாட்ட அரசியல் அதிகரித்திருக்கிறது.
சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உட்பட 250 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பெண்களை கொச்சைப்படுத்தும் மனு தர்மத்தை தடை செய்ய வலியுறுத்தியும் மனு தர்ம நூலை தீயிட்டு எரித்தும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட திருமாவளவன் உட்பட 250 நபர்கள் மீது சட்ட விரோதமாக கூடுதல், அரசு உத்தரவை மதிக்காமல் இருத்தல், தொற்று நோய் பரவல் சட்டம் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதுபோல், தமிழக ஆளுநர் இல்லம் முன் ஆர்ப்பாட்டம் நடத்திய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கட்சியினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் வழங்க கால தாமதம் செய்து வருகிறார் என்றும், இதற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காததைக் கண்டித்தும் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆளுநர் இல்லம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக கிண்டி காவல் நிலையத்தில் இபிகோ 143, 151, 269 உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் மு.க. ஸ்டாலின் உள்பட 3,500 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.