
ஆபரேஷன் சிந்தூர் – OS
- பிரகாஷ் ராமசாமி
இந்தியா இன்னமும், OS ஐ முடிக்கவில்லை. இதை போர் நிறுத்தம் என்று பலரும் சொன்னாலும், இது ஒரு தாற்காலிகமான அமைதி. இந்த இடைவெளியை பாகிஸ்தான் வெற்றியாக கொண்டாடுகிறது. அமெரிக்காவின் அதிபர், இந்த அமைதிக்கு காரணம் நான்தான் என்று அவரின் பெர்மார்மன்ஸ் அப்ரைசலில் மார்க் போட்டுக்கொண்டார்.
முதலில், ட்ரம்ப், இந்தியாவிற்கு இரண்டுதவறுகள் செய்து விட்டதை, இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் கடுப்புடனே பார்க்கின்றனர். ட்ரம்பால் மட்டுமே ஒரு நண்பனை, இப்படி காயப்படுத்திவிட முடியும். இப்படியான முட்டாள்தனத்தை, ஜெலன்ஸ்கி கூட செய்யவில்லை. தான் சொல்லித்தான் போர் நிறுத்தம் நடந்தது என்று, இந்திய தரப்பில் எந்தவித அறிவிப்பும் வெளியாகாதபோது, முந்திரி கொட்டை போல உளறியது, அமெரிக்க உறவில் விரிசல் ஏற்படுத்தி விட்டது.
அமெரிக்க ஜனாதிபதி செய்த முதல் தவறு, இந்திய பாக் நாடுகளுக்கிடையில், காஷ்மீர் பிரச்சினைக்கான தீர்வுக்கு உதவுகிறேன் என்கிற சிவப்பு விளக்கை முதலில் கடந்தார். பிஓகே என்பது இந்தியாவின் ஒரு பகுதி, பாக் அதை ஆட்டையைப்போட்டிருப்பது தாற்காலிகம்தான். அதனால், இதை எந்த ராஜா வந்தாலும், இந்தியா பாக் தாண்டி எவருக்கும் இதில் இடமேயில்லை, என்று பின்னர் மோதி பேசும்போது குறிப்பிட்டது, முக்கியமானது.
அடுத்த சிவப்பு சிக்னல்… இந்த போர் நிறுத்தத்தை, இரு நாடுகளும் ஒத்துக்கொண்டால், நிறைய அமெரிக்க வர்த்தகம் நடக்க வாய்ப்பிருக்கிறது என்றதில், இந்தியா மரண காண்டானது. வர்த்தகம் என்பதை, ஒரு ஓரமாய் வையுங்கள். இந்தியா பாக் இரண்டையும் ஒரே தட்டில் வைத்து பேசியதை இந்தியா சுத்தமாய் ரசிக்கவில்லை. இந்திய அமெரிக்க உறவுக்கு அமோகமாய் கொள்ளிவைத்த ட்ரம்பு காரணம், பச்சை பூமர்கள், பிதுக்கப்பட்ட கோஷ்டிகள், தீவுக்கார பாய்கள் என்று பலரும் இந்தியா, ஒரு அமெரிக்க அடிமை என்று, ஒரு எழவும் புரியாமல், மீம்ஸூம், போஸ்ட்டும் போட்டு தன் அறியாமையை, திறம்பட வெளிச்சம் போட்டு காட்டி விட்டதில், தலையில் அடித்துக்கொள்ளத்தான் தோன்றுகிறது.
ஒரு போரை முடிவுக்கு கொண்டு வருவது என்பது, போர் தொடுத்த இருநாடுகளின் கையில்தான் இருக்கிறது. ஆனால், இரு நாடுகளும், உக்கிரமாக போர் புரிந்தால், அது காலத்துக்கும் முடியாது. இதற்கு உதாரணமாய், ஈரான்-ஈராக் சண்டை, தற்போது உக்ரைன்- ரஷ்யா சண்டை. ஏன், ஹமாஸுடனான போர் கூட இன்று வரை ஒரு முடிவுக்கு வரவில்லை.
இந்த சாதுர்யம், இந்திய ராணுவத்துக்கு இருக்கிறது. இது புதிய பாரதம். 90000 பாக் ராணுவ ஆசாமிகளை தந்துவிட்டு, நம் பைலட்டுகளை திருப்பி வாங்காத இந்தியா அல்ல. இது பாகிஸ்தானுக்கு புதுசு. அத்தனை ராணுவ தளவாடங்களில், ரஷ்ய, அமெரிக்க, இஸ்ரேலிய தளவாடங்கள் இருந்தாலுமே கூட, இந்திய தயாரிப்புகள், மோதி ஆட்சிக்குப்பிறகு அதிகமாகி விட்டது. அது போரில் நிருபணப்படுத்தவில்லை. பாகிஸ்தான் தயவால், இன்று அதுவும் மங்களகரமாய் நிறைவேறிவிட்டது.
BEL, HAL,SOLAR,ZENTECH, BDL,PARAS, Mazagaon, Cochin Shipyards, Bharath Forge, Mahindra Defence, Tata Advanced Systems, Astra Microwave, Brahmose Aerospace, Kalyani Group, Sika மற்றும் அடானி கம்பெனிகள் பெரிய அளவில் நிறைய ராணுவ தளவாடங்கள், துப்பாக்கிகள், ட்ரோன்கள், லேசர்கன்கள், ஏவுகணைகள், ஷூ முதல், யூனிஃபார்ம் வரை இந்திய தயாரிப்புகளின் தரம் உயர்ந்து விட்டது.
மே-7
பெஹல்காமால் கோபமடைந்த இந்தியா.. மே -7 அன்று, 9 தீவிரவாத கேம்புகளை தாக்கியது. மதரஸா வீரர்கள் மண்ணைக்கவ்வ, பதற்றம் தொற்றிக்கொண்டது. 90 இந்திய விமானங்கள் இந்திய எல்லைக்குள், பறந்தது.. ஆனால், BVR, Beyond Visual Rangeஇல், ரஃபேலின் ஸ்கால்ப், AASM ஹாமர் மிஸ்ஸைல்கள், ப்ரஹமோஸ் மிஸைல்கள் பறந்து அழித்தன. பாகிஸ்தானின் ஆர்மி, இறந்த தீவிரவாதிகளின் இறுதிச்சடங்கில் பங்கேற்றபோது, இந்தியா எடுத்த முடிவு, பாக் ஆர்மியும், தீவிரவாதிகளும் ஒன்றுதான். உடுப்புதான் வித்தியாசம் என்று முடிவெடுத்தது.
மே-8
போரின் இரண்டாவது கட்டமாக, இந்தியா, பாகிஸ்தானின் வான்வெளி தடுப்பு சிஸ்டங்களை குறிபார்த்து வீழ்த்தியது. லாகூரில் இவை சின்னாபின்னமானது. சீன தயாரிப்பான HQ-16 பேட்டரிகள், பாக் முழுவதும் இருந்த ரடார் சிஸ்டங்கள், துடைத்து எறியப்பட்டது. இரவு முழுவதும், சைரன் அலற, நெருப்பு சில இடங்களில் எறிந்து கொண்டிருந்தது. பாக், வான்வெளி, எந்தவித தடுப்புமில்லாமல் நிர்வாணமாக நின்று கொண்டிருந்தது.
மே-9
பாகிஸ்தானின் 11 ஏர்பேஸ்கள் இந்தியாவால் அடித்து நொறுக்கப்பட்டது. கிழக்கிலிருந்து, தெற்குவரை, இந்தியா வீசிய ப்ரம்ஹோஸ், ஹாமர், காமிகஸி ட்ரோன்களை பாகிஸ்தான் ஆர்மி, மக்களோடு மக்களாய் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. ராவல்பிண்டியில்தான் ராணுவு ஹெச் க்யூ இருக்கிறது. நூர்கான் உடைத்ததில் மரண அதிர்ச்சி. இதுவரை எவரும் இஸ்லாமாபாத்தை தொடவில்லை. இம்முறை அதற்கு அருகில் இருந்த, இந்த பேஸை அடித்ததில் பேஸ் அடித்து போனது பாகிஸ்தான்.
எதையுமே தடுக்க முடியாத பாகிஸ்தான் கடுப்பாகி, தன்னிடம் இருந்த ஆறு பாலியஸ்டிக் மிஸ்ஸைல்களை இந்தியா நோக்கி அனுப்பியது. இதில், தில்லியை நோக்கி வந்ததை ஹரியானா சிர்ஸாவில் வைத்து தடுத்து அடித்தது S-400. மற்ற அனைத்து மிஸைல்களையும் S-400 தடுத்து விட்டதில் எதை தின்னால் பித்தம் தெளியும் என்று, பாக் ஜெனரல்கள் மசிரை பிய்த்துக்கொண்டனர்.
மே-10
இதற்கு நடுவில், துருக்கி இரண்டு சரக்கு விமானங்களில் ட்ரோன்களை இறக்கிவிட்டு, அதை இயக்கவும் ஆட்களை தந்துவிட்டு போனது. அதாவது, நேரடியாகவே இது போரில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுவிட்டது. அத்தனை ட்ரோன்களையும் இந்தியாவின் கண்ணுக்கு தெரியாத ஒரு இரும்பு கவசம் காப்பாற்றியது. BEL இன், laser drone detection and interdiction systems. இதை, முப்படைகளிலும் கொண்டு சேர்த்தாகிவிட்டது. 11 வருடமாக இதை இந்த அரசாங்கம் பாடுபட்டு உருவாக்கியது மிகவும் பெருமையான விஷயம். இதில் பல எலக்ட்ரானிக் சங்கதிகள் உண்டு, அதாவது, பல அடுக்குகளில் ட்ரோனை கண்டுபிடித்து அழிப்பது. அதாவது, ரேடியோ, ரேடார் ஃப்ரிக்வன்ஸியை கண்டுபிடித்து அழிப்பது. மின் மற்றும் ஒளியியலை வைத்து கண்காணிப்பு, GPS spoofing அதவது ட்ரோனை ஏமாற்றுதல்,லேசர் கன்களை வைத்து soft அல்லது hard Kill களை முப்படைகளும் சாத்திவிட்டது. ஸ்வார்ம் ட்ரோன்கள் எனப்படும் கூட்டமாய் வரும் ட்ரோன்களை, லேசர்களையும், L-70துப்பாக்கிகள், Zu-23 mm துப்பாக்கிகள், மிஸைல்களுக்கு S-400 என்று அடித்து பின்னி விட்டார்கள். இந்த L-70 எல்லாம் அறுத பழசு, ஆனால் இதை மேம்படுத்தி ஒன்று விடாமல் அடித்தது அழித்தது வரலாறு.
இந்தியா சர்கோதா ஏர்பேஸை அடித்தது. இங்கு தான் அணுஆயுத கமேண்ட் சென்டர் இருக்கிறது. இதில், முற்றிலும் பயந்துபோன பாகிஸ்தான் வாலறுந்த நரியாக அமெரிக்காவிடம் சரண்டைந்து.. பின் அமைதி.. இன்று பெஹல்காம், புல்வாமா தீவிரவாதிகளை காஷ்மீரில் போட்டாகிவிட்டது.
ஆப்பிள் முதல், அண்டர்வேர்வரை துருக்கியிடம் எதுவும் வேண்டாம் என்று சொல்லியாகிவிட்டது. நிறைய டூரிஸ்டுகள் டிக்கெட் கேன்ஸல் செய்ய, அஸர்பெய்ஜானும் பரவால்ல வராட்டி போங்க என்றது.
சென்னை, மும்பை தில்லி ஏர்போர்ட்டுகளல் துருக்கியின் செலபை ஆசாமிகள் க்ரவுண்ட் வேலைகளை பார்க்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் கல்தா அவசரமாய் தந்தாகிவிட்டது. ட்ரோன் முதல், பிசினஸ் வரை ஏர்டோகன் இழந்தது அந்த நாட்டுக்கு தேவைதான்.
ஜெய் ஹிந்த்.





