December 5, 2025, 1:00 AM
24.5 C
Chennai

சுதந்திர பலூசிஸ்தான் ‘எக்ஸ்’ பதிவுகள் எல்லாம் போலியாம்!

balochistan army issues - 2025

பலூச்சிஸ்தான் தேசிய இயக்கத்தின் (Baloch National Movement) தலைவர் நியாஸ் பலூச் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிவிப்பில், “பலூச்சிஸ்தான் சுதந்திரம் அடைந்து விட்டதாக சில விஷமிகள் இட்ட பதிவை ஊடகங்களும் நம்பி அதை செய்தியாக்குகின்றன. அது உண்மையில்லை. பலூச் விடுதலை பற்றி எங்களைப் போன்ற அமைப்புகள் வெளியிடும் வரை பொறுத்திருக்கவும். அந்த விஷமிகள் எதிர்களால் (பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ) குழப்பம் உருவாக்க ஏற்படுத்தப் பட்டவர்கள்! – என்று சொல்லியிருக்கிறார்.

அவரது முழுமையான பதிவு:

கடந்த சில நாட்களாக, மே 14 அன்று பலூசிஸ்தான் சுதந்திரம் அடைந்ததாக தவறான கூற்றுகளைப் பரப்பும் அதே அறியப்படாத மற்றும் சரிபார்க்கப்படாத கணக்குகளை நாங்கள் கண்டிருக்கிறோம். துரதிர்ஷ்டவசமாக, சில சர்வதேச ஊடகங்கள் இந்த ட்வீட்கள் உண்மையா என்பதை சரிபார்க்காமல் பகிர்ந்துள்ளன.

தெளிவாகச் சொல்லப் போனால், பலூச் சுதந்திர இயக்கத்தை பலூச் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் வழிநடத்துகின்றன. இதுபோன்ற எந்தவொரு அறிவிப்பும் பலூச் தலைமையிடமிருந்து வர வேண்டும்.

இந்த வகையான வதந்திகளும் போலிச் செய்திகளும் நமது நோக்கத்திற்கு உதவாது, அவை அதற்கு தீங்கு விளைவிக்கும். இது நல்ல நோக்கத்துடன் நண்பர்களால் செய்யப்படுகிறது என்றால், தயவுசெய்து நிறுத்துங்கள். இது எதிரிகளால் செய்யப்படுகிறது என்றால், அது பலூச் சுதந்திரப் போராட்டத்தை சேதப்படுத்தும் முயற்சியை மட்டுமே காட்டுகிறது.

இந்த போலி கணக்குகள் உடனடியாகப் புகாரளிக்கப்பட்டு பின்தொடரப்படாமல் இருக்க வேண்டும். தயவுசெய்து விழிப்புடனும் பொறுப்புடனும் இருங்கள். – என்று குறிப்பிட்டிருக்கிறார்.

முன்னதாக, பலூசிஸ்தான் தனது விடுதலையை அறிவித்து விட்டதாக இரு தினங்களுக்கு முன் சமூகத் தளங்களில் செய்திகள் பரவின. அதை எண்ணி இந்தியாவிலும் பலரும் செய்திகளைப் பகிர்ந்து கொண்டனர். அவற்றில் இந்தியாவின் உதவியைக் கோரும் வகையில் அவற்றின் செய்திகள் இருந்தன. குறிப்பாக, இந்தியா பாகிஸ்தானை கிழக்குப் பக்கம் இருந்து தாக்கினால், தாங்கள் மேற்குப் பக்கம் இருந்து தாக்குவோம் என்றும், இந்தியா தனது நாட்டில் ஒரு தூதரகத்தைத் திறக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளதாக சமூகத் தளங்களில் ஒரு கடிதமும் பரவியது. ஆனால் அவை போலியாக பாகிஸ்தானால் உருவாக்கப் பட்டவை என்று பலூச் தலைவர்கள் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பலூசிஸ்தான் தனிநாடு விவகாரம் அத்தனை எளிதல்ல. நேரடியாகவே அதில் பல பிரச்சினைகள் உள்ளன என்பதால் இது குறித்து சிந்தித்து சமூகத் தளங்களில் பதிவுகள் செய்யுமாறு சிலர் அறிவுறுத்துகின்றனர்.

  1. இந்தியாவின் முக்கிய வெளியுறவுத் துறை கொள்கை என்பது அயல்நாட்டு உள்விவகாரங்களில் தலையிட மாட்டாம் என்பது ( வெளிப்படையாக )
  2. கிழக்கு வங்க பிரச்சினையில் நேரடி ஆக்ஷன் எடுத்ததன் காரணம் விவகாரம் முற்றி அகதிகள் மிக அதிக அளவில் இந்தியாவிற்கு புகுந்தது ( இன்று‌வரை அது‌ பெரிய தலைவலி)
  3. தெரிந்தோ தெரியாமலோ இலங்கை விவகாரத்தில் எடுத்த பின்பு மாற்றிக் கொண்ட முடிவுகள். அதற்கு நாம் கொடுத்த விலை முன்னாள் பிரதமரின் உயிர் (அவரை பலருக்கும் பிடிக்காது என்றாலும் )
  4. சீனா பலூசிஸ்தானில் செய்துள்ள முதலீடுகள். பாகிஸ்தானில் அவர்கள் செய்துள்ள 65 பில்லியன் டாலர்கள் (2022 வரை ). அதில் பெரும்பான்மையான முதலீடு பலூசிஸ்தான் பகுதியில்தான். எனவே சீனா அது தனி நாடாவதை எதிர்க்கும்
  5. அங்கு கனிம வளங்களை கணிசமாக உள்ளன. அமெரிக்காவிற்கு தேவையான கனிமங்கள் அங்கிருந்தால் அமெரிக்க நிறுவனங்களுக்கு பாகிஸ்தான் பச்சைக் கொடி ( நடக்கலாம் ) காட்டினால் அமெரிக்காவும் பலூசிஸ்தான் தனி நாடாவதை எதிர்க்கும்.
  6. திபெத் தனி நாடாக இருந்தது. அதை சீனா ஆக்ரமித்ததால் இந்தியாவில் அதன் தலைமறைவு அரசு செயல்பட இந்திய அரசாங்கம் அனுமதித்துள்ளது. பலூசிஸ்தான் விவகாரம் அப்படி அல்ல.
  7. அதே போல் அவர்களும் அதே ‘அமைதி’ மார்க்கத்தவர்களே. அவர்களை நம்புவதும் கடினம். தனி நாடாகப் பிரிந்த பின் அவர்களது திட்டம் / செயல்பாடுகள் என்ன என்பது தெளிவாக இல்லை. அவை இல்லையெனில் உள்நாட்டுப் போரால் சீரழியும் மற்றுமொரு நாடாக மாறி விடும் அபாயமும் உண்டு.
  8. நமக்கு அவர்களுடன் நேரடி எல்லை இல்லை. ஈரானுடன்தான் அவர்களின் எல்லை உள்ளது. அவர்களுடனும் சண்டை நடக்கிறது அவ்வப்பொழுது.

எனவே அவசரப்படுவதில் எந்த நன்மையும் இல்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories