உதயமானது தென்காசி மாவட்டம்! ஆனாலும்.. ஒரு நல்ல வாய்ப்பை இழந்துவிட்டார் முதல்வர் எடப்பாடி!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம் நெல்லை லைஃப் ஸ்டைல்

EDAPPADI - 2026

விதி எண் 110ன் கீழ் தென்காசி தனி மாவட்ட அறிவிப்பை வெளியிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

விதி எண் 110ன் கீழ் நிர்வாக அறிவிப்புகள் பலவற்றை அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அப்போது, காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பிரித்து செங்கல்பட்டு புதிய மாவட்டமாக உருவாக்கப் படும் என்று அறிவித்தார்.

அது போல், நெல்லை மாவட்டத்தைப் பிரித்து, தென்காசி புதிய மாவட்டமாக உருவாக்கப் படும் என்று அறிவித்தார். இதை அடுத்து, தமிழகத்தில் மாவட்டங்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்திருக்கிறது. முன்னதாக, கள்ளக்குறிச்சி 33வது மாவட்டமாக உதயமானது.

நிர்வாக வசதிக்காக நெல்லை மாவட்டத்தைப் பிரித்து தென்காசி மாவட்டம் புதிதாக உருவாகிறது. இதில் 3 வருவாய் கோட்டங்கள் அடங்கும்.

கடந்த 25 வருடங்களுக்கு முன்னரே, தென்காசிக்கு வாஞ்சிநாதன் பெயரை வைத்து, வாஞ்சி மாவட்டம் அறிவிக்கப் பட வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப் பட்டன. ஆனால் தற்போதுதான் தென்காசி மாவட்டம் அறிவிக்கப் பட்டுள்ளது. ஆனால் நேற்று ஜூலை 17ம் தேதிதான் வாஞ்சிநாதன் பிறந்த நாள் விழா கொண்டாடப் பட்டது.

நேற்றே தென்காசி தனி மாவட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தால், வாஞ்சி நாதன் பெயரில் மாவட்டம் அமைக்கப் போராடிக் கொண்டிருந்த பலரது உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், வாஞ்சியின் பிறந்த நாளில் தென்காசி மாவட்டம் அறிவிக்கப் படுகிறது என்ற நற்பெயரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெற்றிருக்கலாம். ஒரு நாள் தாமதமாக அறிவிப்பு வெளியிட்டு, அதற்கான வாய்ப்பை இழந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

1 thought on “உதயமானது தென்காசி மாவட்டம்! ஆனாலும்.. ஒரு நல்ல வாய்ப்பை இழந்துவிட்டார் முதல்வர் எடப்பாடி!”

  1. வாஞ்சி நாதன் இறந்த நாள் ஜூன் 17 , பிறந்த நாள் பற்றி குறிப்பு இல்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.