
அறந்தாங்கி
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோயிலில் அனைத்து விவசாயிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
விவசாயிகள் விவசாயத்திற்கு வாங்கிய கடன்களை ரத்துசெய்யகோரியும் பயிர்காப்பீடு மற்றும் வறட்சி நிவாரணம் அனைவருக்கும் வழங்ககோரி நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு குளத்துகுடியிருப்பு சுப்ரமணியன் தலைமை வகித்தார்.கலந்தர் வரவேற்றார்.
முன்னாள் எம்எல்ஏ உதயம் சண்முகம் முன்னிலை வகித்து பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் பரிவீரமங்களம் செல்லக்கண்ணு பெருவிளாவயல் சங்கிலிமுத்து மங்களம் மாரிமுத்து விளானூர் ராமநாதன் கருப்பூர் செந்தில்குமரன் பாண்டிபத்திரம் பாரதிராஜா செல்வமணி பாண்டியன் மாரிமுத்து நமச்சிவாயம் காளிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்
விவசாயிகள் சங்கம் பொன்னுச்சாமி ஆர்ப்பாட்டத்தைதுவக்கி வைத்தார்.சிஐடியூ நிர்வாகி செல்வராஜ் நிறைவு செய்தார்.முடிவில் முருகேசு நன்றி கூறினார்.



