புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக இன்று பதவியேற்கவுள்ள கிரண்பேடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில் அம்மாநில அரசு அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிரண்பேடி, வளமான புதுச்சேரியே தமது நோக்கம் என்றும், அதற்காக அனைவரும் இணைந்து பாடுபடவேண்டும் என்றும் கூறினார்.
மாநிலத்தின் வளர்ச்சிக்காக அனைவரும் பொறுப்பை உணர்ந்து செயல்படவேண்டும் வேண்டுகோள் விடுத்தார்
[wp_ad_camp_4]



