ஐ.பி.எல். போட்டியின் இறுதி ஆட்டம் பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நாளை (29.05.2015) அமீரக நேரப்படி மாலை 6.30 மணிக்கு நடக்கிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்– சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இதுவரை நடந்த 9 ஐ.பி.எல். போட்டியிலும் விளையாடியுள்ள பெங்களுரூ அணி தற்போது 3–வது முறையாக இறுதிப் போட்டியில் ஆடுகிறது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தனது 4–வது போட்டியிலேயே அந்த அணி இறுதிப்போட்டிக்கு நுழைந்து உள்ளது. இந்த ஐ.பி.எல். சீசனில் இரு அணிகளும் மோதிய ஆட்டத்தில் தலா ஒரு வெற்றி பெற்றன. இரு அணிகளும் முறையாக ஐ.பி.எல். கோப்பையை பெறும் ஆர்வத்தில் உள்ளன.
Popular Categories



