[wp_ad_camp_4]
பள்ளிகளில் 5-ம் வகுப்பு வரை தேர்வு நடத்த கூடாது என்று மத்திய அரசுக்கு உயர்மட்டக் குழு பரிந்துரைத்துள்ளது.
சுப்பிரமணியன் தலைமையிலான உயர்மட்டக் குழு 200 பக்க அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது. கல்வியின் தரத்தை உயர்த்தும் பொருட்டு, 8-ம் வகுப்பு வரை மாணவர்களை தோல்வியடையச் செய்யக் கூடாது என்ற கல்வி உரிமைச் சட்ட விதியை திருத்த அக்குழு பரிந்துரைத்துள்ளது.
6-ம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு தேர்வு வைக்கலாம் என்றும், தேர்வில் தோல்வியடையும் மாணவர்களுக்கு மேலும் 2 வாய்ப்புகள் கொடுக்கலாம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உயர் கல்வியின் தரத்தை உயர்த்தும் பொருட்டு, வெளிநாட்டு கல்வி நிறுவனங்களை இந்தியாவுக்குள் அனுமதிக்கலாம் என்று சுப்பிரமணியன் குழு தெரிவித்துள்ளது



