மேற்கிந்திய தீவு சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணி இன்று அறிவிப்பு

சற்றுமுன் விளையாட்டு

09 Aug09 BCCI - 2026

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதியில் தோற்று வெளியேறியதை அடுத்து மகேந்திர சிங் தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அப்படி எதையும் இதுவரை தோனி அறிவிக்கவில்லை. இந்த நிலையில், இந்திய அணி மூன்று டி20, மூன்று ஒருநாள், இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீசுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

அதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படவிருக்கும் நிலையில் தோனிக்கு இடம் கிடைக்குமா எனக் கேள்வி எழுந்துள்ளது.

இதனிடையே, வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்குத் தன்னை தேர்வுசெய்ய வேண்டாம் என தோனியே இந்திய அணித் தேர்வுக்குழுவைக் கேட்டுக்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

இனிமேல், இந்திய அணியின் விக்கெட் காப்பாளர் இடத்திற்கு ரிஷப் பன்ட்டே முதல் தேர்வாக இருப்பார் எனக் கூறப்படுகிறது.

அதே நேரத்தில், ‘‘தோனி 15 பேர் கொண்ட அணியில் ஒருவராக இருப்பார். ஆனால், விளையாடும் பதினொருவரில் ஒருவராக இருக்கமாட்டார். ஒரு வழிகாட்டியாக அணியில் அவர் இருப்பார்,’’ என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.