சென்னை: ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணி வீரர்கள் வெளியில் செல்லும் போது ஏதாவது நேரிட்டால் நாங்கள் பொறுப்பல்ல என்று வெறித்தனமாக வன்முறையைத் தூண்டிப் பேசியுள்ளார் பண்ருட்டி வேல்முருகன்.
தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், காவிரி விவகாரத்தில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஒற்றுமையை சீர்குலைக்கவே ஐபிஎல் போட்டி நடத்தப்படுகிறது என்றார்.
மேலும், ஐபிஎல் போட்டியை நிறுத்த ஸ்டேடியத்தை முற்றுகையிட திட்டமிட்டுள்ளோம் என்று கூறிய வேல்முருகன் சென்னை அணி வீரர்கள் வெளியே செல்லும்போது ஏதாவது நேரிட்டால் நாங்கள் பொறுப்பல்ல என்று வன்முறையைத் தூண்டிவிட்டபடி பேசினார்.
நாளை சென்னையில் ஐபிஎல் போட்டி நடந்தால் ரசிகர்கள்போல் சென்று தொண்டர்கள் எதிர்ப்பர் என்று எச்சரிக்கை விடுத்த அவர், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகளின் ஊழல்களை வெளிப்படுத்த நேரிடும் என்று கூறியுள்ளார்.
முன்னதாக, ஐபிஎல்., போட்டிகள் குறித்த அரசியல் தமிழகத்தில் நிலவுவது குறிப்பிடத் தக்கது.




