சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா விடுதலையாகி பெங்களூருவில் ஓய்வெடுத்து வருகிறார்.
இன்னும் இரண்டொரு நாட்களில் சசிகலா தமிழகம் வருவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் மதுரையில் அதிமுக பிரமுகர் பூமிநாதன் என்பவர், சசிகலா விடுதலையானதை வரவேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி , துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவருடைய புகைப்படத்துடன் ஒரு போஸ்டர் ஒட்டியுள்ளார்.
மதுரையில் ஒட்டப்பட்டுள்ள “தியாகத்தின் சிம்ம சொப்பனமே! தமிழ்நாட்டின் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் , தமிழகத்தின் கம்பீரமே! வருக,!வருக! போன்ற வாசகங்கள் அடங்கிய சசிகலா வரவேற்பு போஸ்டர்களால் மதுரை மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
போஸ்டர் என்றாலே மதுரை என்று ஆகிவிட்ட நிலையில், தற்போது இந்த்அ போஸ்டர்களால் தமிழக அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . இது ஆளுங்கட்சியான அதிமுக.,வினரிடையே பதட்டத்தை உருவாக்கியுள்ளது!