மாட்டுச் சாணம்… பாதுகாப்புக்காக சிசிடிவி கேமராக்கள்! எங்கு தெரியுமா?

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
cow dong cctv camera - 2026
  • மாட்டு சாணம் பாதுகாப்புக்காக சிசிடிவி கேமராக்கள். எங்கு தெரியுமா?
  • ஆம். நீங்கள் படிப்பது உண்மைதான். மாட்டு சாணத்திற்கு இருக்கும் டிமாண்ட் அப்படி.
  • இது வேறு எங்கோ அல்ல. நம் நாட்டின் நடு மாநிலமான சட்டீஸ்கரில் தான்.

சட்டிஸ்கர் அரசாங்கம் 2020 ல் கோதான் நயா யோஜன் என்ற திட்டத்தை அமல்படுத்தியது. இந்த திட்டத்தின்படி அரசாங்கமே விவசாயிகள் மற்றும் கோசாலைகளிலிருந்து மாட்டு சாணத்தை இரண்டு ரூபாய் ஒரு கிலோ என்று வாங்குகிறது.

இவ்வாறு கிராமங்களில் இருந்து மாட்டு சாணத்தை சேகரித்து உதவி சங்கங்கள் மூலம் வர்மி கம்போஸ்ட் ஆக தயாரித்து விவசாயிகளுக்கு விற்கிறது. இதற்காக உதவி சங்கங்களுக்கு கடன் கூட அளித்துள்ளது.

இதனால் சத்தீஸ்கரில் மாட்டு சாணத்திற்கு டிமாண்ட் அதிகமாக பெருகி உள்ளது. இதனால் தான் அங்கு மாட்டு சாணம் மிகவும் மதிப்பு வாய்ந்த பொருளாக மாறிவிட்டது. அனைவரும் திருடும் நிலை ஏற்பட்டுள்ளதால் அங்கு சிசிடிவி கேமராக்களை பொருத்தவேண்டி வந்துள்ளது.

அம்பிகாபூர் முனிசிபாலிட்டியில் அரசாங்க கோதான் நிலையத்திலிருந்து மாட்டு சாணத்தை திருடிச் சென்ற 5 பெண்கள் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து 45 கிலோ சாணத்தை அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.

இவ்வாறு திருட்டு அதிகரித்து வருவதால் கோதான் நிலையங்களில் பாதுகாப்புக்காக கட்டுதிட்டமான ஏற்பாடு செய்துள்ளார்கள். கோதான் நிலையங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி உள்ளார்கள். அதேபோல் பாதுகாப்பு ஊழியர்களையும் நியமிக்க உள்ளார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.