வெளியுறவுத்துறை அமைச்சரின் தமிழ் டிவீட்; வரவேற்று மகிழ்ந்த தமிழர்கள்!

இந்தியா சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்

s jaishankar - 2026

வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தமிழில் டிவிட்டர் பதிவு செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பதில் அளித்திருந்தார். அதற்கு பலரும் பாராட்டும் மகிழ்ச்சியும் தெரிவித்து வருகின்றனர்.

ஈரானில் கப்பலில் தவித்து வரும் 18 இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழக முதல்வர் பழனிசாமி, மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் அனுப்பி இருந்தார். இந்தக் கடிதத்தை பதிவிட்டு, தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் ஜெய்ஷங்கர் டுவீட் செய்துள்ளார்.

ஈரானில் கப்பலில் தவிக்கும் 18 இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் முதல்வர் எடப்பாடியின் கடிதத்தைப் பகிர்ந்து, அதற்கு பதில் அளிப்பதாக தமிழில் டுவீட் செய்துள்ளார். அதற்கு பலரும் மகிழ்ச்சியும் பாராட்டும் தெரிவித்து வருகின்றனர். தங்களுக்கு தமிழ் படிக்கவும் எழுதவும் தெரியுமா? ஒரு ஆர்வத்தால் கேட்கிறேன் என்று ஒருவர் அதில் கேட்டுள்ளார்.

வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் டிவிட்டர் பதிவில்…

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.