கட்டு கட்டாய் சிக்கிய ஹவாலாப் பணம் ! சென்னை ஹோட்டலில் கேரள இளைஞர் கைது !

அடடே... அப்படியா? உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் சென்னை தமிழகம்

kaithu e1563169848461 - 2026சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் காவல்துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பிட்ட இடங்களில் வாகன சோதனையும் நடைபெற்று வருகிறது.
money 1 - 2026இதையடுத்து நேற்று சென்னையை அடுத்த மண்ணடியில் உள்ள தனியார் ஹோட்டலில் காவல்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். இதில் கேரளாவைச் சேர்ந்த இலியாசர் என்ற இளைஞரிடம் இருந்து ரூ 60 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது.

அவரிடம் அந்தப் பணத்துக்கான எந்த முறையான ஆவணங்களும் இல்லாததால் அது ஹவாலாப் பணம் எனக் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அவரையும் கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இது யாருடையப் பணம், எதற்காகக் கொண்டு வரப்பட்டுள்ளது போன்ற கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.